இன்றைய ராசிபலன்: சுபசெய்திகள் கிடைக்கப்பெறும் ராசிகள்!

தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மே21, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2023, 05:50 AM IST
  • இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
  • சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்
  • எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும்.
இன்றைய ராசிபலன்: சுபசெய்திகள் கிடைக்கப்பெறும் ராசிகள்! title=

அனைத்து ராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

21-05-2023, வைகாசி 07, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 10.10 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம் காலை 09.04 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். சந்திர தரிசனம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00
எம கண்டம் - பகல் 12.00 - 01.30
குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30
சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00
பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

மேலும் படிக்க | கடகத்தில் இணையும் சுக்கிரன் - செவ்வாய்! வெற்றிகளை குவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

இன்றைய ராசிப்பலன் - 21.05.2023

மேஷம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.

ரிஷபம்
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மிதுனம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கடகம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

கன்னி
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராகும்.

தனுசு
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

கும்பம்
இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். 

மீனம்
இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி, 
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001.

மேலும் படிக்க | மகேஷ் நவமி பண்டிகை எப்போது? ​​ஏன் கொண்டாடப்படுகிறது?​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News