திருமண தடை நீங்கி விரைவில் கெட்டி மேளம் கொட்ட சில எளிய பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் மிக கடுமையாக இருந்தால் திருமணம் நடைபெறாது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2022, 09:06 PM IST
திருமண தடை நீங்கி விரைவில் கெட்டி மேளம் கொட்ட சில எளிய பரிகாரங்கள் title=

சிலருக்கு திருமணம் எளிதில் கை கூடாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்து. கை நிறைய சம்பளம், நல்ல வேளை இருந்தாலும், காரணமே இல்லாமல் திருமணம் கை கூடாமல் இருக்கும். பெற்றவர்களுக்கு இதனால் மன நிம்மதி இல்லாமல் இருக்கும். 

இதற்கு செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.  இந்நிலையில், திருமண தடைகள் அனைத்தும் நீங்க சில எளிய பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம் மிக கடுமையாக இருந்தால் திருமணம் நடைபெறாது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கு முருகனுக்கு உகந்த  செவ்வாய்கிழமை அன்று, முருக பெருமானை வணங்கி விளக்கேற்றி வழிபட்டால், பல வகை  தோஷங்களால் ஏற்படும் தடைகள் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும்.

அதோடு, வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள செவ்வாய் பகவானை வழிபட்டு முத்துக்குமார சுவாமியை வணங்கினால், விரைவில் திருமணம் கை கூடும்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

திருமண தடைகள் நீங்க சங்கட ஹர சதுர்த்தி அன்று விக்னங்களை அனைத்தையும் நீக்கும் விநாயகரை வழிபட்டு வர தடைகள் நீங்கி விரைவில் நாதஸ்வர ஒலியை விரைவில் கேட்கலாம். 

சுந்தரகண்டம் பாராயணம் செய்வதும் திருமண தடைகளை நீக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சுந்தரகாண்டத்தை தொடர்ந்து பாராயணம் செய்வது நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை. 21 நாட்கள் தொடர்ந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதன் மூலம் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். 

இதை தவிர சிவலிங்கத்திற்கு தவறாமல் அபிஷேகம் செய்வதினாலும் திருமணம் கை கூடும். அபிஷேக பிரியன் சிவனை மனம் குளிரச் செய்ய, சிவலிங்கதிற்கு பசும் பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம். சிவனுக்கு பிடித்த வில்வ இலைகளையும் அர்ப்பணிக்கலாம். இதனால், சிவபெருமான் உங்கள் மன ஆசைகளை நிறைவேற்றுவார். திருமணமாகாதவர்கள் 16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருப்பதும் திருமணம் கை கூடி மணதிற்கு பிடித்த துணை கிடைக்கும். 

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News