Combust: சனீஸ்வரரையே பாடாய் படுத்தப்போகும் சூரியன்! 2023 ஜனவரி 30 எச்சரிக்கை அவசியம்

Saturn Combust Alert:  கும்ப ராசியில பிரவேசிக்கும் சனீஸ்வரனை கட்டுப்படுத்தும் சூரியன்! சனியை பலவீனமாக்கும் சூரியனின் எரிப்பு என்று?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 12, 2022, 08:09 AM IST
  • நீயா நானா? சனீஸ்வரருடன் மோதும் சூரியன்
  • கும்ப ராசியில பிரவேசிக்கும் சனீஸ்வரனை கட்டுப்படுத்தும் சூரியன்!
  • சனியை பலவீனமாக்கும் சூரியனின் எரிப்பு
Combust: சனீஸ்வரரையே பாடாய் படுத்தப்போகும் சூரியன்! 2023 ஜனவரி 30 எச்சரிக்கை அவசியம் title=

சனிப்பெயர்ச்சி 2023: நவக்கிரகங்களில் சனீஸ்வரர் கர்மங்களுக்கு ஏற்பட பலன்களைக் கொடுக்கும் நீதிபதி என்று அறியப்படுகிறார். கர்ம கிரகமாக கருதப்படும் சனீஸ்வரர், அடுத்த ஆண்டு அதாவது 2023 ஜனவரி 17, அன்று மகர ராசியிலிருந்து  கும்ப ராசியில் வக்ரமாகவுள்ளார். இந்த மாற்றத்திற்கு பிறகு சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களின் மாற்றங்களுக்கும் முக்கியத்துகம் உண்டு என்றாலும், சனி பகவானின் ராசி மாற்றத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. புத்தாண்டில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 17 மாலை 5:04 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசியில் நுழையும் சனீஸ்வரர்,  ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 12:02 மணி முதல் அன்று இரவு 11:36 மணி வரை எரிப்பு நிலையில் இருக்கும்.

எரிப்பு நிலையில் சனீஸ்வரர் இருக்கும்போது, அவர் தனது பலத்தை இழந்து, பலவீனமான கிரகமாக மாறுவார் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன, அந்த சமயத்தில் சனீஸ்வரரின் எந்த பாதிப்பும், நன்மையும் எந்த ராசிக்க்காரருக்கும் எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தாது.

இதற்குப் பிறகு, 2023ம் ஆண்டில் ஜூன் 17 முதல் இரவு 10:48 மணி வரை வக்ரமாக இயங்கத் தொடங்கும் சனீஸ்வரர், நவம்பர் நான்காம் தேதி காலை 8:26 மணிக்கு அது மீண்டும் நேரடி இயக்கத்திற்கு வருவார்.

மேலும் படிக்க | Ezharai Sani: 2023 சனிப் பெயர்ச்சியால் ஏழரை நாட்டானால் துன்பப்படப்போகும் ராசிகள்

புத்தாண்டில், தனுசு ராசிக்காரர்களின் ஏழரை ஆண்டு கால சனியின் பாதிப்புகள் நீங்கும். மகர ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறி இறுதிக் கட்டத்திற்கு வந்துவிடுவார்கள்.  கும்ப ராசிக்காரர்களின் முதல் கட்ட ஏழரை ஆண்டு சனியின் தாக்கம் முடிந்து மத்தியக் கட்டம், அதாவது இரண்டாவது இரண்டரை ஆண்டு தாக்கத்தை எதிர்கொள்வார்கள்.

ஏழரை நாட்டானின் முழு வீச்சையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கும்ப ராசியினர் ஒரு புறம் என்றால், மீன ராசியினருக்கு சனியின் ஏழரை ஆண்டு கால பலன்கள் பலனளிக்கத் தொடங்கிவிடும். துலாம் ராசிக்காரர்கள், சனி திசையில் இருந்து வெளியேறினால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி நல்லது செய்யும். கடக ராசிக்காரர்களுக்கோ கண்டடக் சனி தொடங்கிவிடும்.

சனீஸ்வரர், ஒருவரின் வாழ்க்கையில் கஷ்டத்தைக் கொடுப்பார் என்பது மேம்போக்கான கருத்து என்றாலும், வாழ்க்கையில் ஒழுக்கமாக இருக்கவும், நீதியை மதிக்கவும் கற்றுக்கொடுக்கிறது. ஒரு ஆசிரியர் நம் ஆற்றலை சரியான திசையில் பயன்படுத்த நம்மை தயார்படுத்துவது போல, நாம் தவறு செய்தால், முதலில் அதைத் திருத்திக் கொள்ள சனீஸ்வரர் எச்சரிக்கைக் கொடுகிறார். அதன்பிறகும் திருந்தாவிட்டால், ஆசிரியரைப் போல தண்டிப்பதால், வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் ஆசான் எனவே சனிதேவர் வணங்கப்படுகிறார்.

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு உஷார் நிலை

கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் , பலருக்கு பாதகமாக இருக்கும் என்றால், சிலருக்கு சாதகமாகவும் இருக்கும். கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால், நமது இலக்குகளை நாம் அறிந்திருக்க வேண்டும், அப்போதுதான் நமது பலத்திற்கு ஏற்ப நமது நோக்கங்களை அடைய முடியும், 2023 ஆம் ஆண்டு கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சி அனைவரின் தொழில், வேலை, திருமணம் எனவாழ்க்கையின் பல்வேறு பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.  

மேஷ ராசியில் பத்தாவது மற்றும் பதினொன்றாம் வீட்டை ஆளும் கிரகமான சனி, மேஷ ராசியிலிருந்து பதினொன்றாம் வீட்டிற்குச் செல்கிறார். இந்த ராசி மாற்றத்தால், வருமான வீடாகக் கருதப்படும் பதினொன்றாம் வீட்டின் தாக்கமும், பதினொன்றாம் வீட்டில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படும் சனிப் பெயர்ச்சியும் இந்த ஆண்டு மேஷத்திற்கு பலன் அளிக்கும்.

பொதுப்பலனாக சொன்னால், சவால்கள் நிறைந்த ஆண்டாக புத்தாண்டை மாற்றும் சனீஸ்வரன், கடின உழைப்புக்கான முழுமையான பலனைக் கொடுப்பார். ஆசைகள் மற்றும் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும். தீட்டிய திட்டங்களும் நிறைவடையும், தன்னம்பிக்கை உயரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தனுசு ராசியில் பிரவேசிக்கும் சூரியன்; ‘சிலருக்கு’ பண வரவு... ‘சிலருக்கு’ பண விரயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News