இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டி சில்வா விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் டேல் ஸ்டெயினைக் கடந்து 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேலும் படிக்க | வெற்றிக்குப் பிறகு இலங்கை வீரரை பாராட்டிய இந்திய வீரர்கள் - ஏன்?
இப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை இலக்காக நிர்ணயித்து இருந்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்த அந்த அணி, 2வது இன்னிங்ஸில் 208 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இமாலய வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.
முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், 2வது இன்னிங்ஸிலும் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 440 விக்கெட்டுகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவரை 434 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த கபில்தேவ், 2வது இடத்தில் இருந்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் கும்பிளே முதல் இடத்தில் இருக்கிறார்.
மேலும் படிக்க | ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் ரேங்கில் முதல் இடத்தில் இந்திய வீரர்
86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிருக்கும் அஸ்வின், இந்த அரிய சாதனைக்கு சொந்தக்காரரானார். டேல் ஸ்டெயின் 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வினுக்கு முன்னால் வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் 7-ம் இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் முதல் இடத்திலும், ஷேன் வார்ன் 2வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆண்டர்சன், கும்பிளே, மெக்ராத், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR