புதுடெல்லி: பிரான்ஸ் கால்பந்து இதழ், இந்த மாத தொடக்கத்தில் பலோன் டி'ஓர் விருதுக்கான 30 பெயர்கள் கொண்ட பெயர்ப் பட்டியலை வெளியிட்டது. அதில், விருதை வெல்வது யார் என்பது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
லியோனல் மெஸ்ஸி 7வது முறையாக விருதைப் பெறுவதாகவும், ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வைரலாகின்றன.
இறுதிப் பட்டியலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு நாட்களுக்கு முன்னதாக கடந்த வியாழக்கிழமையன்று (அக்டோபர் 28, 2021) வைரலாகின.
Sourced confirm that the 2021 Ballon d’Or results have been leaked!
Leo Messi is taking home number 7 #LM7 #BallonDor #BalonDeOro pic.twitter.com/4PCKIOZmu7
— SEÑOR GALINDO (@SenorGalindo) October 28, 2021
அச்சிடப்பட்ட ஆவணமாக இருப்பதாகத் தோன்றும் இந்தப் பட்டியலின் மொபைல் ஸ்னாப்பில் 2021 பதிப்பின் வெற்றியாளர் யார் என்பது தெரிகிறது. PSG மற்றும் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி 7வது முறையாக Ballon'dor விருதை வெல்வார், அதைத் தொடர்ந்து போலந்து மற்றும் Bayern Munich ஸ்ட்ரைக்கர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி இரண்டாவது இடத்தைப் பெறுகிறார். 14 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முதலிடத்தை இழந்துள்ளார்.
ரியல் மாட்ரிட் முன்னணி வீரரான கரீம் பென்சிமா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெறுகிறார். செல்சியா மற்றும் யூரோ 2020 வெற்றியாளர்களான இத்தாலியின் ஜோர்ஜின்ஹோ மற்றும் சர்வதேச கால்பந்தில் எப்போதும் அதிரடி காட்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கின்றனர்.
ALSO READ | 1 பந்துக்கு 4 ரன்! திரில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள்!
இந்த விருதை, இறுதியாக 2019 ஆம் ஆண்டில் மெஸ்ஸி விருதை வென்றார். அவருடைய மேலும் ஆல்ரவுண்ட் செயல்திறன் அர்ஜென்டினா, 15 வது கோபா அமெரிக்கா பட்டத்தையும் 28 ஆண்டுகளில் முதல் சர்வதேச பட்டத்தையும் பெற உதவியது என்பதால், மெஸ்ஸியை முதலிடத்தில் வைத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பருவத்தில் சிறந்த கோல் அடிக்கும் வலுவான போட்டியாளராகக் கருதப்படுபவர் லெவண்டோவ்ஸ்கி. ஆனால் இப்போதைக்கு, அர்ஜென்டினா வீரரே முன்னிலையில் இருக்கிறார்.
COVID-19 தொற்றுநோய் காரணமாக மதிப்புமிக்க Ballon'dor விருது 2020 இல் வழங்கப்படவில்லை. வெற்றியாளர் யார் என்பது நவம்பர் 29ஆம் தேதி பாரிஸில் அறிவிக்கப்படும். அப்போது தான், இந்த வைரல் செய்தி உண்மையா இல்லையா என்பது 100% உறுதிப்படுத்தப்படும்.
READ ALSO | French Open பேட்மிண்டன் போட்டித்தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR