மண்ணை கவ்விய இந்தியா! சொல்லியடித்த வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியஅணி பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2022, 08:15 PM IST
  • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி
  • ஷகிப் அல்ஹசன் அபார பந்துவீச்சு
  • கடைசி விக்கெட்டில் சாதனை செய்த வங்கதேசம்
மண்ணை கவ்விய இந்தியா! சொல்லியடித்த வங்கதேசம் title=

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, இந்திய அணி பேட்டிங் இறங்கியது. ஷிகர் தவான் 7 ரன்களுக்கு அவுட்டாக, ரோகித் சர்மா 27 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்களுக்கு அவுட்டாக, ஸ்ரேயாஸ் 24 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய கே.எல்.ராகுல் மட்டும் அதிரடியாக விளையாடி 73 ரன்கள் எடுக்க, மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மீதம் 9 ஓவர்கள் இருந்தது.

மேலும் படிக்க | IND vs BAN : டைவ் அடித்து ஷகிப் அல் ஹாசனை பழிவாங்கிய விராட் - மாஸ் மொமண்ட்

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருகட்டத்தில் அந்த அணி தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதாவது 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அப்போது இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். வீரர்களும் மிதப்பில் விளையாடினர். ஆனால், நங்கூரம்போல் நிலைத்து நின்று கொண்ட மெஹந்தி ஹசன், கடைசி விக்கெட்டுக்கு முஸ்தாபிசூருடன் கூட்டணி அமைத்தார்.

இருவரும் கடைசி வரை விக்கெட் இழக்காமல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேச அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி, தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை எங்கள் மண்ணில் வீழ்த்துவோம் என சொல்லியதை, இன்றைய போட்டியில் செய்து காட்டிவிட்டனர். வெற்றி இலக்கை எட்டியவுடன் வங்கதேச அணி வீரர்கள் மைதானத்தில் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என வங்கதேச அணி முன்னிலை வகிக்கிறது. தோல்விக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் சோகமாக மைதானத்தை விட்டு வெளியேறினர்.

மேலும் படிக்க | மாயாஜால சுழலில் இந்திய அணியை சாய்த்த ஷகிப் அல்ஹசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News