IND vs SL: சஞ்சு சாம்சனுக்கு லாஸ்ட் சான்ஸ் கிடைக்குமா? - இந்திய அணியில் வரும் 3 மாற்றங்கள்

IND vs SL 3rd T20I: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI) ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 30, 2024, 11:33 AM IST
  • சஞ்சு சாம்சனுக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படுமா?
  • முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்க வாய்ப்பு
  • பேக் அப் வீரர்களுக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படலாம்.
IND vs SL: சஞ்சு சாம்சனுக்கு லாஸ்ட் சான்ஸ் கிடைக்குமா? - இந்திய அணியில் வரும் 3 மாற்றங்கள் title=

IND vs SL 3rd T20I Playing XI Prediction: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று டி20 தொடர் தொடங்கியது. இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த வகையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டி இந்திய நேரப்படி 7 மணிக்கு தொடங்கும். சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் இதனை நேரலையில் காணலாம். சோனி லிவ் ஓடிடி தளத்தில் சந்தா செலுத்தியும் நீங்கள் நேரலையில் காணலாம். இன்றைய கடைசி டி20 போட்டிக்கு பின்னர், வரும் ஆக. 2, 4, 7 ஆகிய நாள்களில் ஓடிஐ போட்டிகள் நடைபெறும். ஓடிஐ தொடரை முன்னிட்டு விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இலங்கைக்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு!

அதற்கு முன் இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி என்பது ஆறுதல் போட்டி என்றாலும் இந்திய அணியை வீழ்த்தி வைட்வாஷை தவிர்க்கும் முனைப்பில் இலங்கையும், வைட்வாஷ் செய்து வெற்றிநடையை தொடர இந்தியாவும் கடுமையாக போராடும் எனலாம். இருப்பினும், இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதாவது, இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வென்றுவிட்டதால் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களின் பேக்-அப் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

மேலும் படிக்க | மும்பையில் இருந்து விலகும் ரோஹித் சர்மா... ரெடியாக இருக்கும் இந்த 5 அணிகள் - யாருக்கு கிடைக்கும் லக்?

இந்திய அணியில் தற்போது ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூன்று பேருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இன்று சிவம் தூபே விளையாடலாம். அதேபோல், அக்சர் படேலுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரும், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் கலீல் அகமதும் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், கடந்த டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு தொடரும் எனலாம்.

கில்லுக்கு ஓய்வு

ஏனென்றால், சுப்மான் கில்லுக்கு பதிலாகவே சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். சுப்மான் கில் ஓடிஐ தொடரிலும் விளையாட வேண்டும் என்பதால் அவருக்கு இன்றும் ஓய்வளிக்கப்படலாம். சுப்மான் கில்லுக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதன் காரணமாக கடந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. எனவே, சஞ்சு சாம்சனுக்கு இன்றும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம். கடந்த போட்டியில் ஓப்பனிங்கில் இறங்கி டக் அவுட்டான சஞ்சு சாம்சன், இம்முறையும் ஜெய்ஸ்வாலுடன் இறங்கி அதிரடி காட்டத் தயாராவார் என எதிர்பார்க்கலாம்.

ரிஷப் பண்ட்...?

இல்லையெனில், சுப்மான் கில் ஓப்பனிங் இறங்குகிறார் என்றால் ரிஷப் பண்டுக்கு ஓய்வளிக்க வேண்டும். அவர் ஓடிஐ தொடரில் விளையாட உள்ளதால் சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் வகையில், விக்கெட் கீப்பர் பேட்டராக இறங்கி நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யலாம். சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதன் மூலம் பேக்-அப் பேட்டர் ஒருவர் பலமடைவார்.

பந்துவீச்சு ஆப்ஷன்கள்

ரின்கு சிங், ரவி பிஷ்னோய், சிராஜ் ஆகியோர் இந்த போட்டியிலும் தொடர்ந்து விளையாடுவார்கள் எனலாம். ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு பின், சூர்யகுமார் - பண்ட் - ரியான் பராக் - தூபே - ரின்கு சிங் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வரிசையாக பேட்டிங்கிற்கு இறங்கலாம். ரவி பீஷ்னோய், சிராஜ், கலீல் அகமது ஆகியோர் பந்துவீச்சில் கைக்கொடுப்பார்கள். பந்துவீச்சில் இவர்கள் மூவரை தவிர, ரியான் பராக் - தூபே - வாஷிங்டன்  சுந்தர் ஆகிய மூன்று ஆப்ஷன்களும் உள்ளன.

மேலும் படிக்க | இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News