சூப்பர் 8 சுற்றில் இந்த அணிகள் இல்லையா? அதிர்ச்சி அளித்துள்ள 2024 டி20 உலக கோப்பை!

T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முக்கியக்கட்டத்தை எட்டியுள்ளது. முக்கிய அணிகள் கூட தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2024, 01:30 PM IST
  • மோசமான நிலையில் பாகிஸ்தான் அணி.
  • சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம்.
  • கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வெற்றி கட்டாயம்.
சூப்பர் 8 சுற்றில் இந்த அணிகள் இல்லையா? அதிர்ச்சி அளித்துள்ள 2024 டி20 உலக கோப்பை! title=

T20 World Cup 2024: இந்த ஆண்டு 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இந்த டி20 போட்டியை பார்த்து வருகின்றனர். 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த உலக கோப்பையில் 4 குரூப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப் நிலை ஆட்டத்தில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெரும். தற்போது உலக கோப்பை போட்டி அதன் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. கிட்டத்தட்ட சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சில டாப் அணிகள் கூட இடம் பெற தவறியுள்ளது.

மேலும் படிக்க | India vs Pakistan: டி20 உலக கோப்பையில் மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான்?

குரூப் A

இந்தியா - இரண்டு வெற்றிகளுடன் இந்தியா இந்த டி20 உலக கோப்பையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது 4 புள்ளிகளுடன் அடுத்து அமெரிக்கா அல்லது கனடாவுக்கு எதிரான விளையாட உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் சூப்பர் 8க்கு தகுதி பெரும். 

யுனைடெட் ஸ்டேட்ஸ் - முதல் முறையாக டி20 உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்கா ஆச்சரியமளிக்கும் விதமாக விளையாடி வருகிறது. தற்போது 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் சூப்பர் 8க்கு தகுதி பெற்றுவிடும்.

கனடா - முதல் போட்டியில் அமெரிக்காவிடம் தோற்றாலும், அடுத்து அயர்லாந்திற்கு எதிரான வெற்றி பெற்றுள்ளது. அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் சூப்பர் 8க்கு தகுதி பெறலாம்.

பாகிஸ்தான் - 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. கிட்டத்தட்ட வெளியேறியுள்ள நிலையில் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். 

அயர்லாந்து - பாகிஸ்தானை போலவே அயர்லாந்து அணியும் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அடுத்து அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றால் சூப்பர் 8க்கு தகுதி பெறலாம்.

குரூப் B

ஸ்காட்லாந்து - இந்த பிரிவில் ஸ்காட்லாந்து சிறப்பாக விளையாடி முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் சூப்பர் 8-ல் இடம் பெறுவது உறுதி ஆகும்.

ஆஸ்திரேலியா - விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அடுத்து ஸ்காட்லாந்து, நமீபியாவிற்கு எதிராக விளையாட உள்ளது. எனவே சூப்பர் 8ல் இடம் உறுதி ஆகி உள்ளது.

நமீபியா - நமீபியா அணி ஒரு வெற்றி மற்றும் தோல்வியை பெற்றுள்ளது. அடுத்து ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளதால் சூப்பர் 8 சவாலாக இருக்கும். 

இங்கிலாந்து - இங்கிலாந்து அணி பெரும் தடுமாற்றத்தில் உள்ளது. ஓமன் மற்றும் நமீபியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் சூப்பர் 8க்கு தகுதி பெற முடியும்.

ஓமன் - விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் ஓமன் சூப்பர் 8க்கான ரேஸில் இருந்து வெளியேறி உள்ளது. 

குரூப் C

ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்திற்கு எதிராக அபாரமான வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி குரூப் Cல் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 8 உறுதி ஆகிவிடும். 

மேற்கிந்தியத் தீவுகள் - மேற்கிந்திய தீவுகள் அணியும் 2 வெற்றிகளுடன் வலுவான இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 8ல் இடம் உறுதி ஆகி விடும். 

உகாண்டா - ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளதால் இவர்களது சூப்பர் 8 கனவு நனவானது சற்று கடினமே. 

பப்புவா நியூ கினியா - சூப்பர் 8க்கு தகுதி பெரும் வாய்ப்பு பப்புவாவிற்கு மிகவும் குறைவு. அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது.

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ள நியூசிலாந்து அணி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 

குரூப் D

தென்னாப்பிரிக்கா - டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது. 3 போட்டிகள் விளையாடி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 இடத்தை  தக்கவைத்துள்ளது.

பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா அணியை வீழ்த்தியுள்ள பங்களாதேஷ் சூப்பர் 8 சுற்றில் இடம் பெற நெதர்லாந்து மற்றும் நேபாளத்தை வெல்ல வேண்டும். 

நெதர்லாந்து - சுப்பர் 8க்கு தகுதி பெற நெதர்லாந்து பங்களாதேஷ் மற்றும் நேபாளத்திற்கு எதிரான மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

நேபாளம் - ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நேபாளம் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சூப்பர் 8க்கு தகுதி பெறலாம். ஆனால் இது மிகவும் கடினம். 

இலங்கை - இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ள இலங்கை சூப்பர் 8க்கு தகுதி பெறுவது கடினமே. 

மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு செல்லுமா இந்திய அணி? சாம்பியன்ஸ் டிராபி தேதி இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News