India vs England: ராஞ்சியில் நடைபெற உள்ள நான்காவது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தர்மசாலாவில் நடக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற உதவினார். இதனால் இந்தியா இந்த தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
First #TeamIndia Pacer to the ICC Men's Test Rankings
Congratulations, Jasprit Bumrah @Jaspritbumrah93 pic.twitter.com/8wKo1641BI
— BCCI (@BCCI) February 7, 2024
மேலும் படிக்க | கோலி வைரம்.... பும்ரா அப்போதே இதை சொன்னார் - ரவி சாஸ்திரி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில், ராஞ்சியில் நடைபெறும் நான்காவது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டியிலேயே அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் இது முக்கியமான போட்டி என்பதால் அவர் விளையாட உள்ளார். இந்திய அணியில் தற்போதுள்ள அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா மட்டுமே உள்ளார். மேலும் இந்திய பிட்சுகளில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியுமா. விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா ஒன்பது விக்கெட்டுகளை அசத்தினார். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிஷன் சிங் பேடிக்குப் பிறகு டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.
மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, இதில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். முதலில் காயம் காரணமாக அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், மோசமான பேட்டிங் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் வட்டி மற்றும் சர்பாஸ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கே.எஸ். பரத் பேட்டிங்கில் சொதப்பி வருவதால் கூடுதல் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முதல் டெஸ்டில் காயம் காரணமாக வெளியேற ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மீதமுள்ள தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் உடன் தகுதியை கருத்தில் கொண்டு அவர்கள் விளையாடுவார்களா மாட்டார்களா என்பது போட்டி தொடங்கும் நாளில் தீர்மானிக்கப்படும்.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்
மேலும் படிக்க | Video: நம்பர் 7 ஏன் ரொம்ப ஸ்பெஷல்... தோனி கூலாக சொன்ன பதிலை பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ