இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மூன்று போட்டிகளில் வென்ற நியூசிலாந்து முதல் இடத்திலும், 5 போட்டிகள் வென்ற இந்தியா இரண்டாவது இடத்திலும், 6 போட்டிகள் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. எதனடிப்படையில் இப்படி பாயிண்ட்ஸ் டேபிள் இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதன் விவரத்தை இங்கே பார்க்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்
தற்போது 2023 – 2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியிருந்தாலும் முதல் முறை நியூசிலாந்து அணியிடமும், இரண்டாவது முறை ஆஸ்திரேலிய அணியிடமும் தோல்வியை தழுவியது. இம்முறை கப் அடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | IND vs ENG: இந்திய அணி வெற்றிக்கு... விராட் கோலியின் முதல் ரியாக்சன் என்ன?
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வெற்றி
இதன்னொருபகுதியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்துவிட்டன. அதில் மூன்றில் இந்திய அணியும் ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு உறுதியாகவிட்டது. இருப்பினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் டேபிளில் இந்தியா இரண்டாவது இடத்திலேயே இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் டேபிள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் டேபிளை பொறுத்தவரைக்கும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. மேலோட்டமாக பார்த்தால் 6 வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணி தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது. எப்படி என்றால், 4 போட்டிகள் மட்டுமே விளையாடி அந்த அணி மூன்றில் வெற்றி பெற்று, வெற்றி சதவீதம் 75 வைத்திருக்கிறது.
ஆனால் இந்தியா இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 டெஸ்ட் வெற்றி, 2 தோல்வி, 1 டிரா என மொத்தம் 62 புள்ளிகளுடன் 64.58 சதவீதம் வைத்திருப்பதால் இரண்டாவது இடம். ஆஸ்திரேலிய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா என மொத்தம் 66 புள்ளிகளுடன் வெற்றி சதவீதம் 55 உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதுதவிர களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் அணிகளின் புள்ளிகள் குறைக்கப்படுகிறது. அப்படி பார்க்கும்போது இங்கிலாந்து 19 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 10 புள்ளிகளையும் இதுவரை இழந்துள்ளன.
மேலும் படிக்க | அரைசதம் அடித்ததும் சல்யூட் செய்யும் துருவ் ஜூரல்! பின்னால் இருக்கும் காரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ