BWF உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2021, 07:54 AM IST
  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
  • வெள்ளிப் பதக்கம் வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்
  • சிங்கப்பூரின் லோ கீன் யூ தங்கம் வென்றார்
BWF உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்  title=

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியா 2 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இந்த சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் செய்துள்ளார்.

முன்னதாக இறுதிப்போட்டியில் சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், 15-21 20-22 என்ற நேர் செட்களில் 43 நிமிடங்களில் தோல்வியடைந்தார்.

இந்தியாவிற்கு இதற்கு முன்னர் பலர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். பிரகாஷ் படுகோன் (1983 இல் வெண்கலம்), பி சாய் பிரனீத் (2019 இல் வெண்கலம்) மற்றும் லக்ஷ்யா சென் (இந்த ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றவர்) ஆகியோர் வெண்கலங்களை வென்றிருக்கும் நிலையில், 28 வயதான கிடாம்பி ஸ்ரீகாந்த், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தற்போது வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த், கடந்த காலத்தில் மகளிர் பிரிவில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் (P V Sindhu and Saina Nehwal) ஆகியோரின் வரிசையில் இந்தியாவுக்கு வெள்ளியைப் பெற்றுத் தந்துள்ளார். 
பி.வி. சிந்து 2019 இல் தங்கப் பதக்கம் வென்றவர். அவர், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் வென்றார், சாய்னா 2015 ஜகார்த்தாவில் வெள்ளி மற்றும் 2017 கிளாஸ்கோவில் வெண்கலம் வென்றார்.

தங்கப் பதக்கத்தை வெல்ல முடியாவிட்டாலும், 2017 பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டதில் இருந்து, அந்த ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற பிறகு, உடற்தகுதி பிரச்சினைகள் மற்றும் ஃபார்ம் இல்லாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்துக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

2019 இந்தியா ஓபனுக்குப் பிறகு தனது முதல் இறுதிப் போட்டியில் விளையாடிய 12ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த், தற்போது வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

தற்போது உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த், இந்த இறுதிப்போட்டியில் 24 வயதான லோ கீன் யூ ஒரு சிறந்த நெட் டிரிப்பிள் மூலம் தொடங்கினார், ஆரம்பத்திலேயே 3-1 என முன்னிலை பெற்றார். டச்சு ஓபன், ஹைலோ ஓபன் மற்றும் இந்தோனேஷியா ஓபன் சூப்பர் 1000 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த லோ கீன் யூ (Loh Kean Yew) தற்போது தங்கம் வென்று சாதித்துள்ளார்.

ALSO READ | பிசிசிஐ-ல் இருந்து விலகிய முக்கிய அதிகாரி! காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News