BCCI ஒப்பந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி-க்கு இடம் இல்லை!

உலக டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை வெற்றிகளுக்கு இந்தியாவை வழிநடத்திய மகேந்திர சிங் தோனி, 2019-20-க்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஆண்டு ஒப்பந்தத்தில் இடம்பெற மறுத்துள்ளார்!

Last Updated : Jan 16, 2020, 04:15 PM IST
BCCI ஒப்பந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி-க்கு இடம் இல்லை! title=

உலக டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை வெற்றிகளுக்கு இந்தியாவை வழிநடத்திய மகேந்திர சிங் தோனி, 2019-20-க்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஆண்டு ஒப்பந்தத்தில் இடம்பெற மறுத்துள்ளார்!

எனினும் BCCI வெளியிட்டுள்ள இந்த ஒப்பந்த பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் A+ கிரேடுகளை பெற்றுள்ளனர். மேலும் அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலப்பகுதியில் ரூ.7 கோடி அவர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த மூவரும் 2018-19 ஒப்பந்தத்திலும் தரம் A+ -ல் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காலம்

Grade A +

 Grade A

Grade B

 Grade C

Oct 2019 - Sept 2020

INR 7 Cr

INR 5 Cr

INR 3 Cr

INR 1 Cr

ஆனால், நியூசிலாந்திடம் 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி தோல்வியின் பின்னர் இந்திய அணியில் இடம் பெறாத தோனி, இந்த முறை எந்த பட்டியலிலும் இடம்பெறவில்லை. முன்னதாக 2018-19 ஒப்பந்தத்தில் A தரத்தில் இருந்தார், மேலும் அவருக்கு அப்போதைய காலக்கட்டத்தில் ரூ.5 கோடி சம்பளம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கோப்பைகளை பெற்றுகொடுத்த தோனி இறுதியாக இந்திய டி20 அணிக்கு, பிப்ரவரி 27, 2019-ல் பெங்களூருவில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரம்

வரிசை எண்

வீரர்கள் பெயர்

A+

1

விராட் கோலி

2

ரோகித் சர்மா

3

ஜாஸ்பிரித் பூம்ரா

இதனிடையே மாயங்க் அகர்வால், நவ்தீப் சைனி, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் BCCI ஒப்பந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர். மாயங்க் அகர்வால் B கிரேட்டில் இருக்கிறார், ஆக அவருக்கு ரூ.3 கோடி சம்பளம் அளிக்கப்படும் என தெரிகிறது. மற்ற நான்கு வீரர்களுக்கும் கிரேடு C-ல்  ஒப்பந்தம் கிடைத்துள்ளது, இதன் மூலம் அவர்கள் தலா ரூ.1 கோடி சம்பளமாக பெறுவார்கள் என கூறப்படுகிறது.

A தரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சேதேஸ்வர் பூஜாரா, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ரிஷாப் பந்த் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி வழங்கப்படும். ராகுல் 2018-19 BCCI ஒப்பந்தத்தில் கிரேடு B பிரிவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரம்

வரிசை எண்

வீரர்கள் பெயர்

A

1

ரவிச்சந்திர அஷ்வின்

2

ரவிந்திர ஜடேஜா

3

புவனேஷ்வர் குமார்

4

சட்டீஸ்வர் புஜாரா

5

ரஹானே

6

கே.எல். ராகுல்

7

ஷிகர் தவான்

8

மொஹமது ஷமி

9

இஷாந்த் ஷர்மா

10

குல்தீப் யாதவ்

11

ரிஷாப் பந்த்

மாயங்கைத் தவிர, கிரேடு B பட்டியலில் விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். கிரேடு C-யில் கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷார்துல் தாகூர் ஆகியோர் சைனி, ஐயர், சுந்தர் மற்றும் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிரேடு C-ன் சம்பள தலா ரூ.1 கோடி ஆகும்.

தரம்

வரிசை எண்

வீரர்கள் பெயர்

B

1

விரத்தமின் சாஹா

2

உமேஷ் யாதவ்

3

யுஜுவேந்திர சாஹல்

4

ஹார்டிக் பாண்டியா

5

மயன்ங் அகர்வால்

 

தரம்

வரிசை எண்

வீரர்கள் பெயர்

C

1

கேதர் ஜாதவ்

2

நவ்தீப் சைனி

3

தீபக் சஹர்

4

மனிஷ் பாண்டே

5

ஹனுமன் விஹாரி

6

சர்துல் தாக்கூர்

7

ஸ்ரேயஸ் ஐயர்

8

வாஷிங்டன் சுந்தர்

சஹா-வின் தரம் C-தரத்திலிருந்து B கிரேடாக உயர்த்தப்பட்டுள்ளது, அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் மற்றும் கலீல் அகமது ஆகியோர் ஒப்பந்தத்தைப் பெறத் தவறிவிட்டனர். கடைசி மூன்று பேர் 2018-19 பட்டியலில் C கிரேட்டில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News