Ricky Ponting: ஐபிஎல்லில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 7 வருடமாக அவர் பயிற்சியாளராக இருந்த போதிலும், ஒருமுறை கூட டெல்லி அணி கோப்பையை வெல்லவில்லை. இதனால் அணி நிர்வாகத்திற்கும், அவருக்கும் ஏற்பட்டுள்ள மனஸ்தாபம் காரணமாக தற்போது அணியில் இருந்து விலகி உள்ளார். மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தும் அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், வேறு அணியில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தாலும், ரிக்கி பாண்டிங் ஐபிஎல்லில் தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
"நான் ஐபிஎல்லில் மீண்டும் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் எனக்கு சிறப்பாக இருந்தது. ஒரு வீரராக இருந்த போதிலும், மும்பையில் சில வருடங்கள் தலைமை பயிற்சியாளராக இருந்த போதிலும் எனக்கு போதிய வரவேற்பு இருந்தது. கடந்த 7 வருடங்களாக டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக நான் விரும்பிய விதத்திலும், உரிமையாளர்கள் விரும்பிய விதத்திலும் அணி செயல்படவில்லை. நான் எப்படியாவது டெல்லி அணிக்கு கோப்பையை பெற வேண்டும் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது டெல்லி அணியின் நிர்வாகம் ஒரு இந்திய பயிற்சியாளர்களை தேடி வருகிறது. அதுதான் அவர்களது விருப்பமாகவும் உள்ளது.
மொத்தமாக அணியை மாற்றி, வேறு திசையில் செல்ல டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அது அவர்களுக்கு நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்றும் நம்புகிறேன். ஐபிஎல்லில் பயிற்சியாளராக இருக்கும் போது, இந்தியாவில் உள்ள நிறைய உள்ளூர் வீரர்களுடன் நேரம் செலவழிக்க முடியும். நான் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த போது, சில சிறந்த நபர்களை சந்தித்தேன், சில சிறந்த நபர்களுடன் பணிபுரிந்துள்ளேன், சில சிறந்த வீரர்களுடன் பல ஆண்டுகளாக பணியாற்றியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தற்போது மற்ற அணிகளில் இருந்து எனக்கு ஆபர்கள் வர தொடங்கியுள்ளன. அடுத்த சில சீசன்களுக்கு ஐபிஎல்லில் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன்" என்று பாண்டிங் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் பயிற்சியாளர் பொறுப்புகளை ஏற்க ஆர்வமில்லை - பாண்டிங்
"எனக்கு தற்போது சர்வதேச அணியில் பயிற்சியாளராக இருக்க விருப்பம் இல்லை. அந்த வேலையை எடுத்து கொள்ள நான் தயாராக இல்லை. ஏனெனில் ஒரு சர்வதேச அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் போது அதிக வேலைகள் இருக்கும். மற்ற சர்வதேச அணிகளுக்கு பயிற்சியளிப்பதும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு பயிற்சி அளிப்பதும் சற்று வித்தியாசமானது. ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு பயிற்சியாளராக என்னை நியமிக்க உள்ளதாக செய்திகள் வருகிறது. அப்படி இருந்தால் என்னுடைய பெயரை நீக்கி விடுங்கள். தற்போது நான் செய்து கொண்டிருக்கும் வேளையில் பிசியாக உள்ளேன். மேலும் எனது குடும்பத்திற்காக அதிக நேரம் செலவு செய்ய உள்ளேன்" என்று பாண்டிங் கூறியுள்ளார். முன்னதாக இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக பாண்டிங் நியமிக்கப்பட இருந்தார். ஆனால் கடைசியில் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் அந்த பொறுப்பை ஏற்றார். அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்கும் ஆஸ்திரேலியாவின் மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளுக்கான வர்ணனையாளர் குழுவில் இருப்பேன் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ