ஞாயிற்றுக்கிழமை மவுங்கானுய் மவுண்டில் உள்ள பே ஓவலில் நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் 14,000 ரன்களை எட்டிய எட்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோஹ்லி, சவுரவ் கங்குலி, எம்.எஸ். தோனி, வீரேந்தர் சேவாக் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோருடன் 14,000 ரன்கள் எட்டிய இந்தியர் பட்டியலில் தற்போது ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இன்று 5-வது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியின் 11-வது ஓவரில் தனது 31-வது ரன்னை எட்டிய ரோகி இந்த சாதனையினை படைத்துள்ளார். எனினும் அவர் 60(41) ரன்கள் குவித்திருந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேட்டிங் நிலையில் இருந்து விலகினார்.
இந்தியாவுக்கான 14,000 கிளப்பில் ரோகித் சமீபத்திய இடத்தைப் பிடித்திருக்கையில், அசாருதீன் (15,593), சேவாக் (17,253), எம்.எஸ்.தோனி (17,266), கங்குலி (18,575), கோஹ்லி (21,777), திராவிட் (24,208), டெண்டுல்கர் (34,357) என பிற இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார், அதேசமயம், குமார் சங்கக்கார (28,016), ரிக்கி பாண்டிங் (27,483), மஹேலா ஜெயவர்தன (25,957) மற்றும் ஜாக் காலிஸ் (25,534) போன்றவர்கள் அதிக ரன்கள் எடுத்தோல் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதற்கிடையில் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 50+ ரன்கள் அடித்தோர் பட்டயலிலும் முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி (24), மார்ட்டின் குப்டில், பால் ஸ்டிர்லிங் (17) மற்றும் டேவிட் வார்னர் (16) ஆகியோரை விஞ்சி ரோகித் தற்போது 25-வது 50+ ஸ்கோரை முடித்துள்ளார்.
- T20I களில் அதிக 50+ ரன்கள்...
25 - ரோகித் சர்மா
24 - விராட் கோலி
17 - மார்ட்டின் குப்டில் / பால் ஸ்டிர்லிங்
16 - டேவிட் வார்னர்
- INDvNZ-க்கான T20I களில் 50+ ரன்கள்...
4 - ரோகித் சர்மா
2 - விராட் கோலி / கே.எல்.ராகுல்