உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் சந்திக்க இருக்கின்றனர். தோனி தலைமையில் முதன்முறையாக முதல் 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, 2வது உலக கோப்பை வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது. இம்முறை அந்த கனவை நினைவேற்ற வேண்டும் என ரோகித் சர்மா தலைமையிலான இந்திய படை, புதிய உத்வேகத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரோகித் சர்மா காயம்
இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்துள்ளார். வலை பயிற்சியின்போது பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் வலைப்பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறிய அவர், அதன் பின் பயிற்சி மேற்கொள்ளவில்லை. இது குறித்து விளக்கம் அளித்த மருத்துவ குழுவினர், காயம் குறித்து கவலை கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | T20 Worldcup 2022: அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?
ரோகித் சர்மா நம்பிக்கை
இங்கிலாந்து அணியுடன் மோதும் அரையிறுதி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இதுவரை சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது என்பதால் கவனமாக விளையாடுவோம் என தெரிவித்துள்ளார்.
டிவில்லியர்ஸ் நம்பிக்கை
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் பேசும்போது, இந்திய அணியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்ல வேண்டும் எனக் கூறிய அவர், அதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | கழட்டிவிடும் டெல்லி... மீண்டும் சிஸ்கேவுக்கு வரும் Lord - தோனி போடும் புதுகணக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ