விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் 2004ம் ஆண்டு அறிமுகமானார் தோனி. 2007ம் ஆண்டில் இருந்து இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். பின்பு 10 ஆண்டுகள் ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணியின் கேப்டனாக இருந்து பல்வேறு ஐசிசி கோப்பைகளை வென்று தந்துள்ளார். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ரோபி, ஆசிய கோப்பை என பல சாதனைகளை செய்துள்ளார் தோனி. பிறகு தனது கேப்டன்சியை விராட் கோலியிடம் கொடுத்துவிட்டு சிறிது நாட்கள் அணியில் ஒரு வீரராக செயல்பட்டார்.
மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸூக்கு இருக்கும் கடைசி ஆயுதம்
2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வி பெற்ற பிறகு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அணியில் ஒரு வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில், தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது, குல்தீப் யாதவை மிரட்டுவது போல பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Never forget when MS Dhoni set a field for the batsman but Kuldeep Yadav kept asking to change the field so Dhoni said this pic.twitter.com/RenJyMLe4x
— Pant's Reverse Sweep (@SayedReng) April 25, 2022
பவுலிங் போட தயாரான குல்தீப் யாதவ் பீல்டரை மாற்ற சொல்லி தோனியிடம் கேட்கிறார். ஆனால், தோனி ஏற்கனவே பீல்டிங் செட் செய்துவிட்டதாக கூறுகிறார். மீண்டும் குல்தீப் யாதவ் பீல்டிங்கை மாற்ற சொல்லி கேட்க, அதற்கு தோனி " பவுலிங் போடுகிறாய்யா? அல்லது வேறு பவுலரை மாற்றடுமா?" என்று கேட்கிறார். உடனே குல்தீப் யாதவ் பவுலிங் போடுகிறார். இந்த சம்பவம் எந்த போட்டியில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. இந்த வீடியோ மட்டுமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | கடைசி ஓவர் திக் திக்.. வெற்றி பெற்றது பஞ்சாப்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR