IPL 2020: தோனியின் அதிரடி Net practice-ன் Video!! மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்!!

துபாயில் நடந்த முதல் நெட் செஷனை வைத்து பார்க்கும்போது, இந்த IPL சீசன் அதிரடியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2020, 07:31 PM IST
  • தோனி வெள்ளிக்கிழமை பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோரது பந்துவீச்சுகளை எதிர்கொண்டார்.
  • சிஎஸ்கே கேப்டன் அனைவரது பந்து வீச்சையும் விளாசி விட்டார் என்றே கூற வேண்டும்.
  • ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனும் நெட் பிராக்டிசில் மிகவும் நன்றாக ஆடினார்.
IPL 2020: தோனியின் அதிரடி Net practice-ன் Video!! மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்!! title=

அதே அமைதி, அதே உறுதி, அதஏ முரட்டு சக்தி, அதே விதத்தில் க்ளௌசை சரிசெய்யும் விதம், விசித்திர புன்னகை – இவை அனைத்தும் எம் எஸ் தோனி (MS Dhoni), சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் நெட் பயிற்சியை மேற்கொள்ள வந்தபோது வெள்ளிக்கிழமை காணப்பட்டது.

தோனி வெள்ளிக்கிழமை பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோரது பந்துவீச்சுகளை எதிர்கொண்டார். சிஎஸ்கே கேப்டன் அனைவரது பந்து வீச்சையும் விளாசி விட்டார் என்றே கூற வேண்டும். அனைத்து விதமான ஷாட்டுகளையும் தோனி இன்று பயிற்சி செய்து பார்த்ததாகத் தெரிந்தது. பல முறை அவர் கிரீசிலிருந்து முன்னுக்கு வந்து பௌண்டரியை நோக்கி பந்தை விளாசித் தள்ளினார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on

சிஎஸ்கே (CSK) தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் முன்னதாக துபாய் புறப்படுவதற்கு முன்பு சென்னையில் ஐந்து நாள் முகாமில் தோனி மிக நல்ல பயிற்சியை எடுத்துக்கொண்டார் என்றும் அவர் மிக நல்ல ஃபார்மில் உள்ளார் என்று கூறியிருந்தார். துபாயில் நடந்த முதல் நெட் செஷனை வைத்து பார்க்கும்போது, இந்த IPL சீசன் அதிரடியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. செப்டம்பர் 19 ஆம் தெதி IPL போட்டிகள் UAE-ல் துவங்கவுள்ளன.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனும் நெட் பிராக்டிசில் மிகவும் நன்றாக ஆடினார்.

COVID-19 பரிசோதனைகளை மேற்கொண்டு, பிறகு பயிற்சிகளுக்கு வந்ததால், நெட் பயிற்சிக்கு வந்த கடைசி அணியாக இருந்தது CSK. COVID-19 தொற்றுள்ள தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கேக்வாடைத் தவிர, எம் எஸ் தோனி உட்பட அனைத்து வீரர்களும் வெள்ளியன்று பயிற்சியைத் துவக்கினர்.

ALSO READ: முழுமையாக தயார் நிலையில் IPL 2020 போட்டிக்கான ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம்....

சிஎஸ்கே குழுவின் 11 உறுப்பினர்களுடன் கடந்த வாரம் தீபக் மற்றும் ருதுராஜ் ஆகியோரும் கோவிட் சோதனையில் நேர்மறையாக சோதிக்கப்பட்டதால், CSK அணியால் குறிப்பிட்ட தேதியில் பயிற்சியைத் துவக்க முடியவில்லை. ஆகஸ்ட் 21 ஆம் தேதி  UAE-க்கு வந்ததும், வீரர்கள் மூன்று முறை சோதிக்கப்பட்டதுடன் ஆறு நாள் தனிமைப்படுத்தலிலும் இருந்தனர். தற்போது, கொரோனா வைரஸ் தொற்று இல்லாத வீரர்கள் தங்கள் பயிற்சியைத் துவக்கியுள்ளனர்.

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற மூத்த வீரர்கள் போட்டிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் அணிக்கு பலத்தை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் அணியின் கேப்டன் தொனியும் ரசிகர்களும் உள்ளனர்.

ALSO READ: பயிற்சியாளராக மாறிய யுவராஜ் சிங் - IPL 2020 தொடரில் பங்கேற்கும் 4 வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்

Trending News