2020 ஐபிஎல் தொடரை எங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளுங்கள்.. அழைக்கும் அண்டை நாடு

ஒருவேளை இலங்கையில் ஐபிஎல் தொடரை நடைபெற்றால், அங்கு விளையாட வீரர்கள்  வருவார்களா? மற்ற நாட்டு வீரர்கள் பயணம் மற்றும் விசா போன்ற பிரச்சனைகள் உள்ளது. அதை எல்லாம் சரி செய்து ஐ‌பி‌எல் 2020 தொடர் நடத்தினால், பெரும் நஷ்டம் குறைய வாய்ப்புள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 17, 2020, 12:03 AM IST
2020 ஐபிஎல் தொடரை எங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளுங்கள்.. அழைக்கும் அண்டை நாடு title=

மும்பை: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் இந்தியன் பிரீமியர் லீக் 2020 காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பிசிசிஐ தனது அறிக்கையில், இந்த போட்டி மேலும் அறிவிக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுகிறது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் - IPL) குழு உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இது குறித்த தகவல்களை வாரியம் அளித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும் இலங்கை 2020 ஐபிஎல் தொடரை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்குமா? இல்லையா? என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

2020 ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் ரூ. 3000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், IPL போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், 2020 ஐபிஎல் தொடரை, எங்கள் நாட்டில் நடத்திக்கொள்ளுங்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏனென்றால் இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இல்லை. 

ஒருவேளை இலங்கையில் ஐபிஎல் தொடரை நடைபெற்றால், அங்கு விளையாட வீரர்கள்  வருவார்களா? மற்ற நாட்டு வீரர்கள் பயணம் மற்றும் விசா போன்ற பிரச்சனைகள் உள்ளது. அதை எல்லாம் சரி செய்து ஐ‌பி‌எல் 2020 தொடர் நடத்தினால், பெரும் நஷ்டம் குறைய வாய்ப்புள்ளது. 

ஐ‌பி‌எல் 2020 தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பு:
பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தனது அறிக்கையில், கோவிட் -19 பற்றி உலகளாவிய சுகாதார கவலைகள் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க இந்திய அரசு செயல்படுத்திய ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக, ஐ.பி.எல் 2020 சீசன் ஒத்தி வைக்கப்படுகிறது. 

நாட்டில் ஊரடங்கு உத்தரவு அதிகரித்த பின்னர், ஏப்ரல்-மே மாதங்களில் லீக் நடைபெறும் என்பது சாத்தியம் இல்லை என்பதை உங்களுக்கு சொல்கிறோம். இருப்பினும், போட்டிகளுக்கான புதிய சாளரத்தை வாரியம் அறிவிக்கவில்லை.

ஐ.பி.எல்-க்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்:
தற்போதைய நிலைமையைப் பார்த்தால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் டி 20 உலக தேதியை மாற்ற ஒப்புக் கொண்டால், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஐபிஎல் நடத்தப்படலாம். ஆஸ்திரேலியாவில் தற்போது ஆறு மாத பயண தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் 30 அன்று முடிவடையும். நிலைமைகள் இயல்பானால் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை விளையாடப்படும்.

உலகக் கோப்பை நடப்பதும் சந்தேகம்:
ஆசிய கோப்பை இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா அழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, ஆசிய கோப்பையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவும் இந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு வருகை தர வேண்டும். இது தவிர, டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் எல்லைகளை 6 மாதங்களுக்கு சீல் வைத்துள்ளதால். இதன் காரணமாக, உலகக் கோப்பை நடைபெறுவதில் சந்தேகம் உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்தது. அதற்காக கடந்த டிசம்பர் மாதம் ஏலம் கூட நடந்தது. எல்லாம் சரியாக சென்ற நிலையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, இந்தியாவிலும் அதிக அளவில் பரவத் துவங்கியது. இதனால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Trending News