நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என இணையதளத்தில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

Last Updated : Jun 4, 2018, 12:39 PM IST
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை: சுப்ரீம் கோர்ட் title=

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என இணையதளத்தில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு கடந்த மே 6-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். மொத்தமாக சுமார் 13 லட்சம் பேர் இந்த நீட் தேர்வை எழுதிள்ளனர். மேலும் மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டன. 

இந்நிலையில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட 40 கேள்விகளில் பிழை உள்ளதால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு அவசர வழக்காக பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சங்கல்ப் என்ற அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. பிறகு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Trending News