Erode By Election Candidate: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிடும்! ஜிகே வாசன் அறிவிப்பு

Erode By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர் போட்டியிட வேண்டும் எனக் கோரிய அ.இ.அ.தி.மு.க வின்  விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக ஜி.கே.வாசன் அறிவித்தார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 20, 2023, 12:01 PM IST
  • ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு போட்டியிட வாய்ப்பு
  • கூட்டணி கட்சிக்காக விட்டுக் கொடுத்த தமிழ் மாநில காங்கிரஸ்
  • ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக விளக்கமளித்த ஜிகே வாசன்
Erode By Election Candidate: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிடும்! ஜிகே வாசன் அறிவிப்பு title=

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் இன்று (20-01-2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 27ம் தேதியன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுகவுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

கலந்தாலோசனைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா, அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது”.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

”கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக திரு. எம். யுவராஜா அவர்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார்கள்”.

”ஈரோடு கிழக்கு சடமன்றத் தொகுதியில் அனைத்துதரப்பு மக்களும் வசிக்கிறார்கள். தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம். தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்”.

மேலும் படிக்க: திமுகவுக்கு திரும்புகிறாரா மு.க. அழகிரி... உதயநிதி சந்திப்புக்கு பின் தகவல்

”தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 19.01.2023 வியாழக்கிழமை காலை, அ.இ.அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள். அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன்”.

”மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது. தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” .

”எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும். கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தமாகா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | களம் தயார்! ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News