வீட்டில் நாய், பூனை வளர்ப்போர் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jul 8, 2024, 02:20 PM IST
  • தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.
  • ஜூலை 10 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
  • மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் பேட்டி.
வீட்டில் நாய், பூனை வளர்ப்போர் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி சார்பாக தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி முகாம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் என்.ஜி.ஓ., கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் பங்கேற்று அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி, World Veterinary Service சார்பில் இன்று பயிற்சி வழங்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணி வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கடைசியாக சென்னையில் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் நாய்கள் ஆணா பெண்ணா தடுப்பூசி போட்டுள்ளதா உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கணக்கெடுப்பில்  கண்டறியப்படும் என தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'அரசியல் பின்னணி இல்லை' - போலீசார் சொல்வது என்ன?

இந்த கணக்கெடுப்பு பணிகளில் கால்நடை மருத்துவர்கள் மட்டும் இன்றி மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இ்ந்த பயிற்சியில் பங்கேற்றனர். உலக அளவில் நகர்ப்புறங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மும்பையில் கூட அதிக மழை பெய்தது.  சென்னையை பொறுத்த வரை ஜூன் மாதம் முதல் சோழிங்கநல்லூரில் ஒரு நாளில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடசென்னையில் 9 சென்டிமீட்டர் ஒருநாளில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் சுரங்க பாதையில் பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு உள்ளிட்ட 4 வழிகளில் மழை நீர் வெளியேறற்றி வருகிறது.

உடனுக்குடன் தேங்கும் மழை தண்ணீரை சரி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான கழிவுநீர் அகற்றும் பணி குடிநீர் கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பல சாலைகளில் தண்ணீர் பிரச்சனை சவால்கள் உள்ளது. இரவு நேர பணிகளும் இதற்காக நடைபெற்று வருகின்றன. மழைக்காலங்களில் பொது சுகாதார பிரச்சனைகள் தண்ணீர், உணவு , பூச்சிகள், கொசு போன்றவைகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது தேவைப்பட்டால் அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படும். மழை காலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கவனமாகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடித்து அதில் 7,165 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டதுள்ளது. 7 முதல் 8 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித்திரிந்த 1150 மாடுகள் பிடிக்கபட்டுள்ளது. அவற்றை படப்பை உள்ளிட்ட பெட் வளர்ப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என்பது மாநகராட்சி தரப்பில் வேண்டுகோள் வைக்கிறோம். மூளையை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது, ஒரு சுகாதார பிரச்சனை அல்லாமல் நோய் பிரச்சனை இது அனைத்து நோய்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

100ல் 5 நாய்கள் அதிகம் வெறி தன்மை கொண்டதாக உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நாய்களைப் பிடித்தாலும் மீண்டும் அதே இடத்தில் விடுவிக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளது.  தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் பிரச்சனை இருப்பது உண்மையாக உள்ளது. நாய் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நாய்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்தால் கூட அவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கூட்டம் நடைபெற்றது. நடைமுறையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி அடுத்த பத்து நாட்களுக்குள் மீண்டும் தன்னார்வலர்கள் மற்றும் கால்நடை துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | கிசுகிசு : பிளாக் ஷீப்களால் வரும் நெருக்கடியால் செம டென்ஷனில் முதன்மையானவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News