தமிழகத்தில் கொரோனாவின் களியாட்டம்

தமிழகத்தில் சென்னையை மட்டுமே மிக அதிக ஆக்ரோஷத்துடன் அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது பிற மாவட்டங்களிலும் அதே தீவிரத்துடன் பரவத் தொடங்கியுள்ளது. 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 30, 2020, 03:47 PM IST
தமிழகத்தில் கொரோனாவின் களியாட்டம்
Zee Media

தமிழகத்தில் கொரோனாவின் (Corona) களியாட்டம் நிற்பதாகத் தெரியவில்லை. கோயம்பத்தூரில், திங்களன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர், கோவை (Coimbatore) நகரின் மொத்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 500 ஆனது. மதுரையில் (Madurai) ஒரே நாளில் 300 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 2000-ஐத் தாண்டியது.

ஜூன் 1 அன்று, லாக்டௌனில் (Lockdown) சில தளர்வுகள் அளிக்கப்பட்டபோது, தமிழகத்தின் மொத்த கொரோனா நோய்த்தொற்றில், சென்னையின் பங்கு 90 சதவிகிதமாக இருந்தது. பின்னர், ஆயிரக்கணக்கில் மக்கள் சென்னையிலிருந்து (Chennai) தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய பிறகு, பிற மாவட்டங்களின் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

தற்போது, சுமார் 55,969 கொரோனா பாசிடிவ் நோயாளிகளுடன், மாநிலத்தின் மொத்த தொற்று எண்ணிக்கையில் சென்னையின் பங்கு 64.9 சதவிகிதமாக உள்ளது.

சென்னையிலிருந்து திரும்பி வந்தவர்களால் பிற மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளும் இதற்கு ஒரு மிகப்பெரிய காரணமாகும். கோவையில் ஆர்.ஜி புதுர் பகுதியும் மதுரையில் பறவை சந்தை பகுதியும் கொரோனா தொற்றின் மையப் பகுதிகளாக உருவெடுத்து வருகின்றன.

ஆர்.ஜி புதூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பற்றி தெரியவந்துள்ளது. இப்பகுதிகளில், குடும்ப விழாக்களும், இறுதிச் சடங்குகளும் நோய்த்தொற்றுக்கு மிகப்பெரும் காரணிகளாக இருந்துள்ளன.

எனினும், மாவட்டங்களில் அரசு கடைபிடிக்கும் பரிசோதனைக் கொள்கைகளில் எந்த ஒத்திசைவும் காணப்படவில்லை. கோவையிலும் மதுரையிலும் சோதனைக்கான சில கிளினிக்குகளே உள்ளன. கோவை மற்றும் மதுரையை ஒப்பிடும்போது, திருச்சியில் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.

தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட மாவட்டங்கள், நிலைமையை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளன. ‘தற்போது மாவட்டத்தில் 4065 படுக்கைகள் உள்ளன. இன்னும் 400 படுக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்ய திட்டம் உள்ளது’ என கோவை சுகாதார சேவைகளுக்கான துணை இயக்குனர் ஜி. ரமேஷ் குமார் தெரிவித்தார்.

ALSO READ: சீனாவுக்கு அடிக்கு மேல் அடி! ஒரு புறம் செயலிகளின் செயலிழப்பு, மறுபுறம் அமெரிக்கா அளித்த அதிரடி அறிக்கை!!

ALSO READ: ஹோட்டல் தாஜை குண்டு வைத்து தகர்ப்பதற்கான மிரட்டல், பாகிஸ்தானிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு