கோடை வெயில், வறண்டு வனம்.. வானரங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் மனிதர்

கோடை வெயிலால் வறண்டு போன வனத்தில் தண்ணீர் தேடி அலையும் வானரங்களின் தவித்த வயிற்றுக்கு உணவு வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் மனிதர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 15, 2024, 02:54 PM IST
  • வேலூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகப்படியாக காணப்படும்.
  • மனிதர்களுக்கு விஞ்ஞான வசதி இருப்பதால் மனிதர்கள் தங்களை காத்துக் கொள்கின்றனர்.
  • கோடை வெயிலால் மாவட்டத்தின் பல வனப்பகுதிகள் காய்ந்து, வறண்டு போயுள்ளன.
கோடை வெயில், வறண்டு வனம்.. வானரங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் மனிதர் title=

வேலூர் மாவட்டத்திற்கு என பல்வேறு வரலாற்று புகழ் பெற்ற சிறப்பு அம்சங்கள் உள்ளது அதே போல தான் கோடை காலம் என்றாலும் மரங்களே இல்லாத மழை நீரோட்டம் இல்லாத பாலாறு என இதுவும் வேலூரின் மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும். அதேபோலத்தான் கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே வேலூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகப்படியாக காணப்படும்.

கோடை காலத்தில் தமிழகத்தில் அதிகப்படியான வெயில் நிலவும் மாவட்டமும் வேலூர் மாவட்டம் ஆகும் இந்த ஆண்டு அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெயில் கொளுத்தி வாட்டி வதைத்து வருகின்றது. இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள மனிதர்கள் குளிர்பானங்கள் மற்றும் வீடுகளில் குளிரீட்டும் அறைகளில் போய் தஞ்சம் அடைந்து கொள்கின்றனர் மனிதர்களுக்கு விஞ்ஞான வசதி இருப்பதால் மனிதர்கள் தங்களை காத்துக் கொள்கின்றனர்.

இது ஒரு பக்கம் நம்மை சுற்றிலும் அன்றாடும் வளம் வரும் நாம் தினந்தோறும் காணும் வானரங்களின் நிலைமையை நினைத்தால் ஐயோ பரிதாபம் தான்.... மரங்களே இல்லாத மலைகளை நாடி தங்கள் இல்லங்களாக ஆண்டாண்டுகளாக வசித்து வரும் வானரங்கங்களில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பினை தற்போது காணலாம்.

வேலூர் மாவட்டம் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள ஒரு வறட்சியான பகுதியும் கூட இந்தாண்டு கொளுத்தும் கோடை வெயிலால் மாவட்டத்தின் பல வனப்பகுதிகள் காய்ந்து, வறண்டு போயுள்ளன. இதனால் வனவிலங்குகள் தண்ணீருக்காகவும் உணவுக்காவும் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. ஒரு சில வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தொட்டி அமைத்து நீர் ஊற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பேர்ணாம்பட்டில் இருந்து கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பத்தலப்பல்லி சோதனைச்சாவடியை ஒட்டிய வனப்பகுதி. 

இது கடுமையான வறட்சி காரணமாக காய்ந்து போயுள்ளது இதனால் இங்கு ஒரு குரங்கு கூட்டமே வசித்து வருகின்றன இங்கு வசிக்கும் குரங்கு கூட்டங்கள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் மிகுந்த அவதிபட்டு வந்துள்ளது.

இதனை பார்த்த வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீத் என்பவர் குரங்குகளுக்கு தண்ணீர் வைக்க முடிவு செய்து தனது சொந்த செலவில் சிமெண்ட் தொட்டிகளை வாங்கி அதை வனப்பகுதிகளில் வைத்து வேன் மூலமாக தண்ணீர் கொண்டு சென்று உற்றி வருகிறார். இதனால் குரங்குள் தண்ணீரை குடித்தும் அதில் குளித்தும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல அப்துல் ஹமீது அவ்வப்போது குடியாத்தம் காய்கறி சந்தைகளுக்கு சென்று பழ வகைகள் வாங்கி குரங்குகளுக்கு உணவையும் வழங்கி வருகிறார். மனிதர்களே சக மனிதர்களை இத்தகைய நவீன காலகட்ட சூழலில் வானரர்கங்ளை தேடி சென்று உணவு அளித்து மகிழ்ந்து வரும் அப்துல் ஹமீதின் செயல் "மனிதம் தாண்டி புனிதம்தான்"

Trending News