திருப்பூர் : பெற்ற தந்தையை மகனே கொலை செய்த கொடூரம்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெற்ற தந்தையை மகனே தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 22, 2022, 09:44 PM IST
  • தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
  • குடித்துவிட்டு விடிய விடிய தொல்லை
  • ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்
திருப்பூர் : பெற்ற தந்தையை மகனே கொலை செய்த கொடூரம்..! title=

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் பயன்பாடற்ற கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் பழனியை சேர்ந்த 42 வயதான செல்வராஜ் தனது தாய் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கிடைக்கின்ற கூலி வேலைகளுக்கு சென்று செல்வராஜின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக இறந்துபோனார். அன்றிலிருந்து குடிபழக்கத்திற்கு அடிமையானவர் தினமும் குடித்துவிட்டு தன்னுடைய தாய் மற்றும் பிள்ளைகளின் நிம்மதியை கெடுத்து வந்திருக்கிறார். விடிய விடிய கத்தி கூச்சலிட்டு எல்லோரின் தூக்கத்தையும் கெடுத்துவிட்டு விடிந்ததும் அப்பாவி போல நடந்துகொள்வார்.

Murder Area

குடும்பத்தினரால் பலமுறை கண்டித்தும் குடி பழக்கத்தை கைவிடாமல் செல்வராஜ் ஊதாரியாக சுற்றித்திரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குடித்து விட்டு வீடு திரும்பிய செல்வராஜ் வீட்டில் இருந்த மகன், மகள் மற்றும் தாய் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது . இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்வராஜின் 20 வயது மகனான அஸ்வத் செல்வராஜை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த கருங்கல்லை தூக்கி தலையில் போட்டிருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Father Murder

மேலும் படிக்க | இளம்பெண்கள் கடத்தல் - தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியர் கைது..!

இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக செல்வராஜின் மகன் அஸ்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் குடும்பத்தினரிடம் ரகளை செய்து வந்த குடிகார தந்தையை பெற்ற மகனே தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | விருதுநகர் : இளம்பெண் பாலியல் வன்கொடுமை திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் கைது..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News