ஜெ., மரணம் குறித்த சர்சை கருத்துகளுக்கு தடை: ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி சர்ச்சைக்குரிய கருத்துகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது....

Last Updated : Dec 5, 2018, 11:24 AM IST
ஜெ., மரணம் குறித்த சர்சை கருத்துகளுக்கு தடை: ஆறுமுகசாமி ஆணையம் title=

ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி சர்ச்சைக்குரிய கருத்துகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது....

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு உயிரிலாந்தார். 

இதையடுத்து, இவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும், இவரின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு இணைவு தினம் அனுசரிக்கபட்டு வருகிறது. இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்சையான கருத்த்துக்களை ஊடகங்கள் வெளியிட ஆறுமுகசாமி ஆணையம் தடை விதித்துள்ளனது.    

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள், ஆதாரங்கள் இருந்தால் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய செய்தியோ, தொடரோ அல்லது விவாத நிகழ்ச்சியோ ஆணையத்தின் அனுமதி இன்றி ஒளிபரப்பக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Trending News