TN Election Campaign: திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்த பாஜக

பாஜக குழு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், "முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி (Arun Jaitley) ஆகியோருக்கு எதிராக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 3, 2021, 01:08 PM IST
  • அருண் ஜெய்ட்லியையும், சுஷ்மா சுவராஜ்ஜையும் பிரதமர் மோடி துன்புறுத்தினார் என உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை
  • உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பாஜக.
  • தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2021) வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும்.
TN Election Campaign: திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்த பாஜக title=

புதுடெல்லி: மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் (Sushma Swaraj) மற்றும் அருண் ஜெட்லி குறித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக சர்ச்சை வெடித்ததை அடுத்து, அவரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 

பாஜக குழு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், "முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி (Arun Jaitley) ஆகியோருக்கு எதிராக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். மேலும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்யக் கோரியதோடு, அவரை திமுக நட்சத்திர பேச்சாளர் (DMK Star Campaigners List) பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

கடந்த மார்ச் 31 ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), "பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாக மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மரணமடைந்தனர்" என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | எடப்பாடியா ? ஸ்டாலினா ? தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் ? கருத்து கணிப்புகள் யாருக்கு சாதகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2021) வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும். அதன் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும். சட்டமன்ற தேர்தலுக்கான இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், வெற்றி பெறும் முனைப்பில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக கூட்டணி (ADMK Alliance), திமுக கூட்டணி (DMK Alliance), மக்கள் நீதி மய்யம் கூட்டணி (Makkal Needhi Maiam), அமமுக - தேமுதிக கூட்டணி (AMMK-DMDK Alliance) மற்றும் நாம் தமிழர் (Naam Tamilar Party)என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

ALSO READ | 5 முதல்வர் வேட்பாளர்கள் - 5 முனை போட்டி: யாரு தாங்க வரபோறாங்க.. நீங்களே சொல்லுங்க மக்களே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News