காவிரி: 2 ஆயிரம் கன அடி தண்ணீ திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Last Updated : Oct 5, 2016, 10:19 AM IST
காவிரி: 2 ஆயிரம் கன அடி தண்ணீ திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்துக்கு கர்நாடகம் 7-ம் தேதி முதல் 1அடுத்த 2 நாட்கள் தண்ணீர் தரவும் உத்தரவிட்டது.

நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:- அதில், ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த முடிவு 18-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கிடையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் காவிரிபடுகையில் உள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரங்களை அறியும் பொருட்டு நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவுக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைவராகவும், உறுப்பினர்களாக எஸ்.மசூத் உசேன், டாக்டர் ஆர்.கே.குப்தா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதன்மை பொறியாளர்கள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு தலைமை செயலாளர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் அதிகாரிகள் செயல்படுவார்கள். இந்த குழு உண்மை நிலையை ஆராய்ந்து 17-ம் தேதிக்குள் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால ஏற்பாடாக தமிழகத்துக்கு 7-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும்’’ எனக்கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு மத்திய அரசு திடீரென்று எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News