சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

நாளை முதல் மே 20ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 5, 2021, 04:23 PM IST
சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை title=

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,82,691 பேர் புதிதாக கொரோனா (Coronavirus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டின் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 2,06,58,234 ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம் தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா! 8 சிங்கங்கள் கோவிட் பாசிட்டிவ்!

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தெற்கு ரயில்வேவும் புதிய ரிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்.,

நாளை முதல் மே 20ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை. மேலும், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளனர்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News