தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து மூன்று கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது...!
தென்மேற்கு பருவமழை காலம் காரணமாக தமிழகத்தில் ஓரளவு மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒடிசா மற்றும் வட ஆந்திரா அருகே கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.
'தமிழக எல்லையை ஒட்டிய, கர்நாடகா, கேரள மாநில பகுதிகளிலும், கிழக்கு கடலோர மாவட்டங்களிலும், வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது குறைந்துள்ளதால், தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது, வட மாநிலங்களில் மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர் போன்ற நான்கு மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...!