ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பை வழங்கவேண்டும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.
இது குறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தார். இந்த நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்தது. இவ்வழக்கை விசாரிக்கும் 3 ஆவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளது.
18 எம்.எல்.ஏக்-கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது....!
ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான - நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.