தமிழகத்தில் திறக்கப்பட்ட TASMAC கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் திறக்கப்பட்ட TASMAC கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

Last Updated : May 8, 2020, 08:25 PM IST
தமிழகத்தில் திறக்கப்பட்ட TASMAC கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு! title=

தமிழகத்தில் திறக்கப்பட்ட TASMAC கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

கொரோனா வைரஸ்  நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் TASMAC கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  நோய்த்தொற்று அதிகம் இருக்கும் பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் TASMAC  கடைகளில் விற்பனை நடைப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் முழு அடைப்பால் சுமார் 44 அடைத்து வைக்கப்பட்டு இருந்த TASMAC கடைகள் மே 7 முதல் திறக்கப்பட்டன. இதனையடுத்து மது பிரியர்கள் உற்சாகமாக கடைகளில் நிறம்ப துவங்கினர். கைத்தட்டிம் விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் மது பிரியர்கள் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். 

இது ஒருபுறமிருக்க, ஒரு சில இடங்களில் TASMAC கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் TASMAC திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கிடையை தமிழகத்தில் திறக்கப்பட்ட TASMAC கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் TASMAC கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மே 17-ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

Trending News