கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

Last Updated : Nov 30, 2019, 08:02 AM IST
கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, மதுரவாயில் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.  அதே போல் தாம்பரம், .குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கிண்டி, மயிலாப்பூர், கொளத்தூர், வேளச்சேரி, கே.கே.நகர், பெரும்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர், நன்னிலம், முத்துபோட்டை, மன்னார்குடி, பெருந்துறைப்பூண்டி, கூத்தாநல்லூரில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகர், மதுராந்தகம், மேல்மருவத்தூ பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

More Stories

Trending News