கிருஷ்ணராக அவதாரம் எடுப்பேன் - சீமான் ஆவேசம்

நான் கிருஷ்ணராக அவதாரம் எடுத்து மக்களை பாதுகாப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 9, 2022, 08:06 PM IST
  • சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு
  • அண்ணாமலையை விமர்சித்த சீமான்
 கிருஷ்ணராக அவதாரம் எடுப்பேன் - சீமான் ஆவேசம் title=

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூடுவது என்பது அரசின் விளையாட்டு. அதில் கருத்து சொல்வதற்கு ஏதும் இல்லை

தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, கடந்த 10 ஆண்டுகள் கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் ஊழல் பற்றியும் பேச வேண்டும். ஊழலுக்காக சிறை சென்ற தலைவியின் கட்சியில் கூட்டணி வைத்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ஊழல் குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.

மேலும் படிக்க | ஆதீனத்தை தொட்டால் திமுகவில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் - கொந்தளித்த ஹெச். ராஜா

பாஜகவினர் சாமியைப் பற்றியே பேசுகின்றனர். ஆனால் நாம் தமிழர் வாழும் பூமியைப் பற்றி பேசுகின்றோம். மக்கள் என்னை நிச்சயம்  ஒருநாள் தேடி வருவார்கள். அதுவரை நான் பொறுமையாக காத்திருந்து கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரமெடுத்து மக்களை நான் காப்பாற்றுவேன். 

மேலும் படிக்க | அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ் தேசிய அரசியல் கோட்பாடுடைய நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி. 2024ஆம் ஆண்டு தேர்தலில் எத்தனை கட்சிகள் நின்றாலும், நாம் தமிழர் கட்சி தனியாகத்தான் நிற்கும். அண்ணாமலையினால் அது எந்தக் காலத்திலும் முடியாது” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News