ஆகஸ்ட் 17 முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass: முதல்வர் கெ.பழனிசாமி

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாநில அரசு ஆகஸ்ட் 17 முதல் (திங்கள்) முக்கியமான நோக்கங்களுக்காக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass-கள் அங்கீகரிக்கப்படும் என்று கூறியுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 15, 2020, 11:08 AM IST
ஆகஸ்ட் 17 முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass: முதல்வர் கெ.பழனிசாமி
Zee Media

தமிழ்நாடு: எடப்பாடி கே பழனிசாமி (K Palanisamy) தலைமையிலான தமிழ்க அரசு மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தளர்வு அளிப்பதாக அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாநில அரசு ஆகஸ்ட் 17 முதல் (திங்கள்) முக்கியமான நோக்கங்களுக்காக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass-கள் அங்கீகரிக்கப்படும் என்று கூறியுள்ளது. தற்போதுள்ள நிலைப்படி, ​​மருத்துவ அவசரநிலைகள், திருமணங்கள் மற்றும் இறப்புகள் போன்ற மிக முக்கிய விஷயங்களுக்காக மட்டுமே E-Pass-க்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் இது தளர்த்தப்படும்.

தொலைபேசி எண்கள் மற்றும் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டுகளின் விவரங்களுடன் E-Pass –க்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக அவை அங்கீகரிக்கப்படும். தொலைபேசி எண்களுடன் E-Pass வழங்கும் தற்போதைய முறை, மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பவர்களைக் கண்காணிக்கவும், COVID -19 தொற்றுக்கு அவர்கள் ஆளானால், அவர்களின் தொடர்புகளைக் கண்டறியவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உதவியுள்ளது என்று சமீபத்திய அறிக்கையில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் (MK stalin) உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்கள் பயணத்திற்கு ஒரு செயற்கைத் தடையை உருவாக்க வேண்டாம் என்று அதிமுக அரசிடம் கேட்டுக் கொண்டதோடு, மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கான E-Pass முறையை உடனடியாக ரத்து செய்யக் கோரியது. இந்த கோரிக்கை அளிக்கப்பட்டு ஒரு நாளில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

சென்னை உள்ளிட்ட இடங்களில் E-Pass வழங்குவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் செய்தி அறிக்கைகளை மேற்கோள் காட்டி, தேவையற்ற நிபந்தனைகளைப் போட்டு மக்களைத் தொந்தரவு செய்வது மனிதாபிமானமற்றது என்றும் இது எதிர் விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்றும் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

ALSO READ: ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது: தெற்கு ரயில்வே

E-Pass கட்டாயமில்லை என்று மத்திய அரசே அறிவித்துள்ளபோது, அதிமுக அரசாங்கம் தொடர்ந்து ஒரு உள்நோக்கத்துடன் அதை வைத்திருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வாக இருக்காது என்று திமுக தலைவர் கூறினார்.

மாவட்டங்களுக்கிடையேயான பயணங்களுக்கு E-Pass தேவைப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடு (Tamil Nadu) என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதன் நோக்கம் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனினும் தற்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு E-Pass வாங்கும் செயல்முறையை எளிதாக்குவதோடு மாநிலங்களுக்கு இடையேயான மக்களின் பயணத்தை சுலபமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ALSO READ: விரைவில் தமிழகத்தில் 3,500 நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்: செல்லூர் கே ராஜு!!