கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கட்சி தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறார். திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக உள்ளார். உதயநிதிக்கு விரைவில் அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று பல நாட்களாக செய்திகள் வந்து கொண்டு உள்ளது. கடந்த சில வருடங்களாக பட விநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த ரெட் ஜெயன்ட் நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல படங்களை விநியோகம் செய்து வருகிறது. தமிழகத்தில் வெளியாகும் அனைத்து பெரிய படங்களையும் ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மறுப்பை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் போனிக்கபூர் தயாரிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் விநியோகம் செய்கிறது. வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. மேலும் அதே தினத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வெளியாக உள்ளது. வாரிசு படத்தின் தமிழக விநியோக உரிமையை 7 ஸ்கிரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது, இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. சிறிது நாட்களுக்கு முன்னர் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் சங்கராந்தியில் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டது. விஜய் நடித்துள்ள வாரிசு படம் வாரசூடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | 'வாரிசுக்கு இதை செய்ய வேண்டாம்' ரசிகர்களுக்கு விஜய் சொன்ன 2 முக்கியமான விஷயம்!
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2019 ஆம் ஆண்டு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இதே போல் சொல்லி இருந்தார், தற்போது அவரை காரணம் காட்டி அவரது படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள முக்கியமான திரையரங்குகளை துணிவு படத்திற்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் புக் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் வாரிசு படத்திற்கு குறிப்பிட்ட திரையரங்குகள் கிடைக்காமல் போகுமா என்ற வருத்தம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உதயநிதி ஸ்டாலின் தமிழகம் தாண்டி தெலுங்கிலும் விஜய்யின் படத்தை வெளிவராமல் இருக்க சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அடுத்த தலைமுறைக்கு திமுகவில் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த பல ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் அது உதயநிதிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்று இப்போது இருந்தே விஜய்யை ஓரம் கட்ட வேலைகள் நடைபெறுவதாகவும் ஒருபுறம் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சார்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். சமீபத்தில் விஜய் தனது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விஷயங்களிலும் விஜய் ஈடுபட்டு வருகிறார். பொதுவாக விஜய் படங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்தது இல்லை. மெர்சல், சர்க்கார், தலைவா என தொடர்ந்து விஜய் படங்கள் வெளியாகும் போது பிரச்சனைகள் வந்தே தீரும். அந்த வகையில் தற்போது வாரிசு படத்திற்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் வாரிசு படத்தின் சில ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. முன்பு விஜய்யும் நானும் ரெகுலராக பேசிக் கொண்டிருந்ததாகவும், தற்போது அதிகம் பேசுவதில்லை என்று உதயநிதி சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அல்லு அர்ஜுனின் நண்பருக்கு எதிராக நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ