கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல்!!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்தார்.

Updated: Jul 12, 2018, 12:16 PM IST
கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல்!!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்தார்.

நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. இதன் முதல் கொடியேற்று விழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சி தலைவர் கமல் கலந்துகொண்டு அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்ததுடன்  கட்சியின் புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். 

அந்த வகையில் கட்சியின் துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார். செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.