Tamil Nadu Latest News: ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த சாம்சங் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சாம்சங் தொழிலாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. தொழிற்சங்கத்தினுடைய பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் வேலைக்கு திரும்ப தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக சாம்சங் ஊழியர்ககளுடைய ஒரு மாத கால நீடித்த அந்த போராட்டம் என்பது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இன்று காலை முதலே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்புக்கு இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்து, இறுதியில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டதன் மூலம் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
போராட்டம் வாபஸ் பெறப்படுவதால், மீண்டும் சாம்சங் ஊழியர்கள் வேலைக்கு திரும்பக் கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் தொழிலாளர்கள் சங்கம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்திற்கும் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தை சேர்ந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் படிக்க - கொட்டும் மழை - நகரில் வெள்ளம் களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மேலும் படிக்க - சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ