BJP vs Congress: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 4, 2020, 11:34 AM IST
  • கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு.
  • கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
  • கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால், எம்.பி. வசந்தகுமாரின் போட்டியிட ஆர்வம்
BJP vs Congress: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு title=

சென்னை: காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி (Kanyakumari,) தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்னும் ஆறு மாதத்தில் அங்கு தேர்தல் நடத்த வேண்டும். எனவே கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதுக்குறித்து தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஆலோசனை செய்து வருகிறது. 

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால், திமுக (DMK Alliance)கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் (Congress) கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார். அதேபோல அதிமுக (AIADMK Alliance) கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக (BJP) சார்பில் வேட்பாளர் களம் இறங்குவார் எனத்தெரிகிறது.

ALSO READ:

எச்.வசந்தகுமார்-பலரது வாழ்க்கையில் வெற்றிப்படிக்கட்டி வசந்தம் வீசச் செய்த வள்ளல்!!

பொன்.ராதா-வை வென்ற வசந்தகுமார் ராஜினாமா செய்யதார்...

அதேநேரத்தில், எம்.பி. வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் (Vijay Vasanth) , "நான் அரசியலுக்கு வரவேண்டும் என தந்தையின் நண்பர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், கட்சி மேலிடம் வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் வீணா தமிழக பாஜகவின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Trending News