சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் புயலாக மாறும். இந்த புயல் தமிழக கரையை நோக்கி நகர கூடும். எனவே மீனவர்கள் ஏப்ரல் 25, 26 தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், ஏப்ரல் 27, 28 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது
அதேபோல இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை தொடர்பாக தமிழகத்திற்கு ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி கன மழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.