Nilgiris Tamil Nadu Lok Sabha Election Result 2024: நீலகிரி மக்களவை தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா போட்டியிட, அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் டி. லோகேஷ் ஆகியோர் களம் கண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக, அதிமுக, பாஜகவுக்கு சரிசமாகவே இருக்கிறது. இருப்பினும் யாருக்கு கூடுதல் வாய்ப்பு என்பதை பார்க்கலாம்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள்
நீலகிரி,
பவானிசாகர் (தனி),
உதகமண்டலம்,
குன்னூர்,
கூடலூர் (தனி),
மேட்டுப்பாளையம்,
அவினாசி (தனி)
நீலகிரி வாக்காளர்கள் எண்ணிக்கை
மொத்த வாக்காளர்கள் :14,28,387
ஆண் வாக்காளர்கள் : 6,87,552
பெண் வாக்காளர்கள் :7,40,742
மூன்றாம் பாலினத்தவர் : 93
நீலகிரி (தனி) 2016 நிலவரம்
வெற்றி பெற்றவர் - ஆ.ராசா திமுக
பெற்ற வாக்குகள் -547832
இரண்டாம் இடம் - தியாகராஜன் அதிமுக
பெற்ற வாக்குகள் -342009
மூன்றாம் இடம் - ராஜேந்திரன் மநீம
பெற்ற வாக்குகள் -41169
நீலகிரி தொகுதி 2024 வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் நீலகிரியில் வெற்றி வாய்ப்பு அதிமுக, பாஜக, திமுக நேரடியாக களம் காணும் தொகுதி. அத்தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருக்கும் ஆ.ராசா மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதை பார்க்க முடிகிறது. அதேநேரத்தில் பாஜக எம்பி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது பாசிடிவ் அபிப்பிராயமே மக்கள் மத்தியில் உள்ளது. அதிமுக வேட்பாளர் டி.லோகேஷ் மீதும் எந்த அதிருப்தி காரணங்கள் இல்லை. ஆனால், ஆ.ராசாவுக்கு இருக்கும் கள அனுபவம் மற்றவர்கள் இருவருக்கும் குறைவு, இந்த முக்கியமான விஷயத்தில் ஆ.,ராசா முன்னிலை வகிப்பதால், வெற்றி வாய்ப்பு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு அதிகமாகவே இருக்கிறது.