தமிழகத்தில் மீண்டும் ஒரு ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான தேவை இல்லை என மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பின்னர் இந்த அறிவிப்பினை மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
READ | கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா...
கடந்த மார்ச் 25 முதல் நகரம் கிட்டத்தட்ட அடைக்கப்பட்டு இருப்பதால் சென்னைக்கு நிவாரணம் தேவை எனவும், சென்னையில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் சில நிவாரணங்களையாவது மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைக்க வேண்டும் என பலர் எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல்வருடனான சந்திப்பை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ வல்லுநர்கள் குழு., "நிகழ்வுகளை குறைப்பதற்கான ஒரே தீர்வு ஊரடங்கு அல்ல, ஊரடங்கை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் ‘இரட்டிப்பாகும் வேகம்’ தற்போது குறைந்துள்ளது. 80% பேருக்கு லேசான அறிகுறிகுடன் தான் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்திக்கொள்ளுதல் அவசியம் எனவும், சுவை, மணம் தெரியாவிட்டால் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.
READ | சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?
மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நான் அதிகரிப்பை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட மாநிலத்திம் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டும் கொரோனா பரவுதலை தடுக்க முடியும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.