தமிழகத்தில் அமல்படுத்தபட்டுள்ள பிளாஸ்டிக் தடை சட்டம் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பாதகமாகவும், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா திறந்து வைத்து நீலகிரி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பேசிய விக்ரம ராஜா நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வு பிரச்சினை தொடர்வதாகவும், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளின் வாடகை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு வழிகாட்டு கமிட்டி அமைத்துள்ளதாகவும் அந்த குழுவில் மாநில அளவிலான வணிகர்கள் சங்க தலைவர்கள் இடம் பெற்று இருப்பதாகவும் விரைவில் அவர்கள் வாடகை பிரச்சினைக்கு தீர்வு காண இருப்பதால் அதிகாரிகள் வாடகை கேட்டு வணிகர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தபடும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து இருப்பதாகவும் அந்த தடையை சிறு வணிகர்கள் முறையாக கடைப்பிடித்து வருவதாகவும் ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி அளித்திருப்பது உள்நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படும் வகையில் இருப்பது ஏற்றுகொள்ள முடியாது என்றார். மேலும் மத்திய அரசு கார்ப்ரேட் கம்பனிகளுகாக வணிக வரி சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து வருவதாக குற்றம்சாட்டிய விக்ரமராஜா உள்நாட்டு வணிகர்கள் பாதிக்காத வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்ட திருத்தங்களை கொண்டு வந்து வணிகர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிற மாநிலங்களில் போதைப் பொருட்கள் விற்பனை இருந்தாலும் தமிழகத்தில் அரசு தடை விதித்துள்ளதால் வியாபாரிகள் போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என வணிகர் சங்கங்கள் மூலம் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும் படிக்க | சொத்து விவரங்களை வெளியிட திமுக தலைவர்கள் தயாரா?... அண்ணாமலை கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ