Rahul Gandhi: ராகுல் காந்தி தமிழகம் வருகை..தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மே 21ஆம் தேதி தமிழகம் வருகிறார். 

Written by - Yuvashree | Last Updated : May 18, 2023, 05:02 PM IST
  • ராகுல் காந்தி தமிழகம் வருகை.
  • ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
  • பெங்களூருவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
Rahul Gandhi: ராகுல் காந்தி தமிழகம் வருகை..தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் title=

காங்கிர்ஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, வரும் மே 21ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார். தந்தையும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவர் தமிழகம் வருகிறார். சென்னையிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள தனது தந்தையின் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த உள்ளார். 

பெங்களூரு செல்லும் ராகுல்:

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் பதவியேற்பு விழா நாளை மறுநாள் (மே 20) அன்று நடைப்பெறுகிறது. கர்நாடக முதல் அமைச்சராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பதவி ஏற்பு விழாவில் பிற்பகல் 12:30 மணிக்கு கலந்து கொள்ளும் ராகுல் காந்தி அதன் பிறகு சென்னை வருகிறார். 

மேலும் படிக்க | Jallikattu Verdict: ‘கலாச்சாரத்துடன் ஒன்றியது ஜல்லிக்கட்டு’உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

கர்நாட முதல்வராக சீதராமைய்யா பதவியேற்பு:

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைதொடர்ந்து, மாநிலத்திற்கு முதல்வராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாஜூன் கார்கே வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியும் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். ராகுல் காந்தியுடனான இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களின் இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடித்தது. 

முதல்வராக சீதராமையா தேர்வு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் டெல்லி வந்தனர். இவர்கள் இருவரும் முதல்வர் பதவியை வாங்கும் முனைப்பில் இருந்தனர். கடும் ஆலோசனைக்கு பிறகு, கர்நாடகாவின் முதல்வராக சீதராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக டி.கே சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

“முதல்வர் பதவியை நன்றாக கையாளுங்கள்..”

சீதராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு ராகுல் காந்தி தரப்பில் இருந்து ஆல் தி பெஸ் கூறப்பட்டதாகவும் முதல்வர் பதவியை நன்றாக கையாளுமாறு ராகுல் காந்தி சீதராமையாவிற்கு அறிவுரை கூறியதாகவும் பேசப்படுகிறது. துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.கே சிவகுமாருக்கு முக்கிய இலாக்காக்கல் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பதவியேற்பு விழா:

சீதராமையா முதலமைச்சராகவும் டி.கே சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்கும் விழா, கந்தீரவ மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார். பதவியேற்பு விழாவிற்கு மறுநாள்தான் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். 

காங்கிரஸ் அமோக வெற்றி:
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. கடந்த மே 13 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றது. 

மேலும் படிக்க | மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகர் விஜய்? போஸ்டர்களால் பரபரப்பு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News