கார் விபத்தில் பலியான அதிமுக எம்.பி ராஜேந்திரனின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி 23ம் தேதி விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் சென்ற கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் எம்பி ராஜேந்திரன் உயிரிழந்தார். இவர் மாவட்ட பஞ்சாயத்து சேர்மேனாக இருந்துள்ளார்.
அவரது உடலுக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராஜேந்திரனின் சொந்த ஊரான திண்டிவனம் அருகே உள்ள ஆதனப்பட்டு கிராமத்திற்கு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்களில், ஆயிரக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.