Tamil Nadu ration card News : அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மகளரிர் உரிமைத் தொகை பெறுவது முதல் முதியோர் உதவித் தொகை பெறுவது வரை என ரேஷன் அட்டை அவசியம். அதில், பயனாளரின் பெயர் இருப்பது கட்டாயம். அதனால், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயரும் ரேஷன் கார்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை பெயர் விடுப்பட்டிருந்தால் குடும்ப உறுப்பினரின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து அந்தந்த பகுதியில் இருக்கும் வட்டார வழங்கல் துறை அதிகாரியிடம் விண்ணப்பித்து பெயரை சேர்த்துக் கொள்ள முடியும்.
ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல்
குழந்தைகள் இருந்தாலும் அவர்களின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க ஆதார் கார்டு அவசியம். பிறப்புச் சான்றிதழை வைத்துக் கூட குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஆதார் கார்டு வாங்குவதற்கும் பிறப்புச் சான்றிதழ் பயன்படும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்கு மேல் இருந்தால் இந்த ஆவணங்களை வைத்து அவர்களின் பெயரை ரேஷன் கார்டில் சேர்த்துவிடலாம். ஒருவேளை ரேஷன் கார்டு இல்லாமல் 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்பட்டிருந்தால், அந்த பெயர்கள் இப்போது நீக்கப்பட்டு வருகின்றன. அதனால், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பெயரும் நீக்கப்பட்டிருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.
ரேஷன் கார்டு பெயர் நீக்கம் ஏன்?
ஏனென்றால் தேனி மாவட்டத்தில் ஆதார் கார்டு கொடுக்காமல் ரேஷன் கார்டுகளில் சேர்க்கபட்ட குழந்தைகளின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சென்ற எஸ்எம்ஸ் செய்தியில், குழந்தைகளின் பெயர் நீக்கம் தொடர்பான கோரிக்கை பெறப்பட்டதாக சென்றுள்ளது. சில நிமிடங்களில் குடும்ப அட்டைகளில் இருந்து வெற்றிகரமாக குழந்தையின் பெயர் நீக்கப்பட்டதாகவும் செய்தி சென்றுள்ளது. இது குறித்து விசாரிக்கையில், ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்காத ஐந்து வயதுதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்
ரேஷன் அட்டைகளில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருப்பதால் உடனே பெற்றோர்கள் குழந்தைகளின் ஆதார் கார்டு அட்டையை முறையாக சமர்பித்து, பெயர் சேர்த்தல் விண்ணப்பம் கொடுத்தால் அவர்களின் பெயர் மீண்டும் குடும்ப அட்டைகளில் சேர்க்கப்படும். இதற்காக, பெற்றோர்கள் அருகில் இருக்கும் இ-சேவை மையங்களுக்கு சென்று குழந்தைகளின் பெயர் சேர்ப்பது தொடர்பாக முறையான விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டுகளில் விரைவில் சேர்த்துக் கொள்ளப்படும்.
அதற்கு முன் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், குழந்தைகளுக்கு கட்டாயம் பிறப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதனை வைத்து ஆதார் கார்டு விண்ணப்பித்து ஆதார் கார்டு வாங்கவும். இந்த இரண்டு ஆணவங்களும் கிடைத்தபிறகு ரேஷன் அட்டையில் குழந்தைகளின் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்தால், விண்ணப்பம் அனுமதிக்கப்படும். குழந்தைகள் மட்டும் அல்லாமல் யாருடைய பெயராக இருந்தாலும் முறையான ஆவணம் அளித்தால் மட்டுமே ரேஷன் கார்டில் பெயர் நீக்கப்படாமல் இருக்கும்.
குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் ஏன்?
முறையான ஆவணங்கள் இல்லாமல் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கப்படுவதால், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு அட்டைக்கும் விநியோகிக்கும் பொருட்களின் அளவும் கூடுதலாக இருக்கிறது. இதை கண்டு கொள்ள தமிழ்நாடு அரசு முறையான ஆவணங்கள் இல்லாமல் ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்பட்ட பெயர்களை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை தொடங்கியிருந்தாலும் படிப்படியாக அனைத்து மாவட்டங்களில் இந்த பெயர் நீக்கல் நடவடிக்கை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ