தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்திய முதல்வர்

தமிழ்நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 7, 2020, 11:58 AM IST
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்திய முதல்வர் title=

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அவர்கள் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதுக்குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், "தமிழ்நாடு  அரசின் பணியாளர்கள், தங்கள் பணியில் இருந்து ஓய்வுபெரும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இந்த அணை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தும். மேலும் இந்த ஆணையை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.

Tamil Nadu Government

Trending News