திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். காவிரி நீர் குறித்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தான் குறிப்பிட்ட தேதியில் கர்நாடகா நீர் கொடுத்து வருவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சர்கள் அதிமுகவினரை பார்த்து பயப்படுவதாக தெரிவித்த கருத்துக்கு, நான் என்ன அவரை பார்த்து பயப்படுகிற மாதிரியா தெரியுது என்று பதில் கேள்வி எழுப்பிய அவர், எதிர்கட்சி தலைவர் அப்படி தான் பேசிக் கொண்டிருப்பார் என பதிலளித்தார்.
மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
ஆளுநர் அடிக்கடி டெல்லி செல்வது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருக்கு வேலை இல்லாத காரணத்தால் அடிக்கடி டெல்லி சென்று கொண்டிருக்கிறார் என கூறினார். மேலும், காவிரியில் உரிய நீர் பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார். தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார்.
அதற்கு முன்பு செய்தியாளர்களை எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசும்போது, " யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும். உலகத்திற்கே தெரியும். பாஜகவிற்கு அடிமை அதிமுக தான். திமுக எங்களுடைய தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது. கர்நாடகாவில் காவிரி தண்ணீர் குறித்து கண்டிப்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு தேதியும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி விவகாரம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இருந்தால் இன்னும் பார்க்கவில்லை. ஆளுநருக்கு வேலை இல்லை. அதனால் தான் அடிக்கடி டெல்லி சென்று கொண்டிருக்கிறார்" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மேலும் படிக்க | Tomato price: தக்காளி விலை எப்போது குறையும்? வெளியான அதிர்ச்சி தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ