மத்திய அரசு நிதியை திமுக அரசு பயன்படுத்தவில்லை - அண்ணாமலை விமர்சனம்

மத்திய அரசு அளிக்கும் நிதியை திமுக தலைமையிலான அரசு சரியாக பயன்படுத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 9, 2022, 04:56 PM IST
  • கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குகிறது
  • குஜராத், உத்தரப் பிரதேசம் மாநிலங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
  • மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியை திமுக அரசு பயன்படுத்தவில்லை - அண்ணாமலை விமர்சனம் title=

‘கெலோ இந்தியா’ திட்டத்தின் கீழ், மத்திய அரசு விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. இதில் அதிகபட்சமாக குஜராத்திற்கு 608 கோடி ரூபாயும், உத்தரப் பிரதேசத்திற்கு 503 கோடி ரூபாயும் என பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் தமிழகத்திற்கு ரூ.33 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருந்தது. இதனையடுத்து மத்திய அரசின் இந்தச் செயலுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி வேண்டுமென்றே தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணிக்கிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கெலோ இந்தியா (Khelo India) திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

மேலும் படிக்க | கேரள மக்களின் பாதுகாப்பை தமிழகம் உறுதி செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ஆனால், இந்த திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்துகொள்ள எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்கு தலைகுனிவு.

 

இது ஒரு demand driven திட்டம். மற்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதிப்பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர். மாநிலப் பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? - ரஜினி - ஆளுநர் சந்திப்பை விளாசிய கே.பாலகிருஷ்ணன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News