Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன்(70). இவர் தனியார் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று புதுக்கிராமத்தில் உள்ள 192வது வாக்குசாவடி மையத்தில் அரசு கொடுத்த பூத் சிலிப்பினை கொண்டு தனது வாக்கினை செலுத்த சென்ற போது அங்கிருந்த தேர்தல் அதிகாரி நீங்கள் செத்துப் போய்விட்டதாக வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் மருதப்பன், "அரசுதான் தனக்கு வாக்களிக்க பூத் சிலிப் வழங்கி உள்ளது. எப்படி நான் செத்துப் போயிட்டேன், ஓட்டு போட முடியாது என்று கூற முடியும்" என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
வாக்காளர் கோரிக்கை...
இதையடுத்து தேர்தல் அதிகாரி கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாளை தொடர்பு கொண்டு பிரச்சனையை எடுத்து கூறினார். முதியவரை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கலாமென்று என்று தாசிலல்தார் கூறியதை தொடர்ந்து ஒரு விண்ணப்பத்தில் முதியவர் மருதப்பனிடம் அவரது கைரேகை மற்றும் கையெழுத்து பெற்ற பின்னர் அவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
மேலும் படிக்க | Actor Vijay: பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா?
தனக்கு வயது 70 ஆகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறேன். உயிரோடு இருக்கும்போது என்னை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கியது எப்படி?, அப்படி என்றால் அரசு ஓட்டு போட எனக்கு பூத் சிலிப் கொடுத்தது எப்படி?. இது எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும், இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருதப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.
மதியம் 1 மணி நிலவரம்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் சில வாக்குச்சாவடிகள் வன்முறை சம்பவத்தால் கடும் பதற்றத்துடன் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 6 மணிவரை பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும், டோக்கன் வழங்கப்பட்ட கடைசி வாக்காளர் வரை வாக்குச் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இன்று காலை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான நிலையில், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. அதுபோல், பல பகுதிகளில் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். தற்போது கோவையில் கூட ஒரு வாக்குச்சாவடியில் 530 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
களத்தில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அதிகாரிகளுடன் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். சில காரணங்களால் இதுபோல் பல வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது அருகில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ