பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க மாநிலக் கட்சிகளிடம் கேட்டுவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க வேட்பாளருக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.